மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 2

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 2

வழக்கின் திருப்பமாக முக்கிய குற்றவாளியான வனவாசி கல்யாண் ஆசிரமம் தலைவர் சாமியார் அசீமானந்தா வழக்கில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் ஆர்எஸ்எஸ் தலைமை சொல்லித்தான் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததாக முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

மேலும், அப்துல் கலீம் என்பவரை அவர் சிறைக்குள் சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பின்போது கலீம் தன்னிடம் தான் செய்யாத குற்றத்துக்காக காவல் துறையால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியதாகத் தெரிவித்திருந்தார். அசீமானந்தா, கலீம் கூறியதைக் கேட்டு மனம் மாறியதாகவும் அதைத்தொடர்ந்தே அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்து பயங்கரவாதம் செயல்பட்டு வருவது முதன்முறையாக அசீமானந்தாவின் வாக்குமூலம் மூலமாகவே வெளிஉலகுக்குத் தெரியவந்தது. ஆனால், தற்போது 11 ஆண்டுகள் கழித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்ற அனைவரின் கேள்வியும் இதுதான். அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் யார் தான் மசூதிக்கு வெடிகுண்டு வைத்தது? இதில் பாதிக்கப்பட்ட அனைவருமே ஒரு மோசமான புலனாய்வினாலும், போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்படாததாலும் இந்த வழக்கு தோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒட்டுமொத்த நீதி அமைப்பின் மீதும் நம்பிக்கை இழக்கவும் வாய்ப்புள்ளது. புலனாய்வு நடத்தப்பட்ட விதமும் விசாரணை நடத்தப்பட்ட விதமும் கேள்விக்குரியதாகும்.

இந்து பயங்கரவாதம் என்று ஒன்றுமில்லை என்று கூறுவதன் மூலம் பயங்கரவாதிகள் ஒரே ஒரு சமூகத்தில் இருந்து மட்டும்தான் வருகிறார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாட்டின் பயங்கரவாத்தை புலனாய்வு செய்யும் சிறந்த அமைப்புக்கு இது பெரும் பின்னடைவாகும். அந்த அமைப்பின் தரத்தையும் நம்பகத்தன்மையும் இது கேள்விக்குரியதாக்கியுள்ளது.

இவ்வாறு சுதிர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மெக்கா மசூதி வழக்கின் மூலமாகத் தேசிய பாதுகாப்பே சேதத்துக்கு உள்ளாகியுள்ளது என்று ரத்தன் சார்தா என்ற பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

மெக்கா மசூதி வழக்கில் காங்கிரஸ் ஆட்சியின்போது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒட்டுமொத்த இந்தச் சமூகத்தையும், இந்து மத அமைப்புகளையும் குற்றம் சாட்டுவதாக இருந்தது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை சில முஸ்லிம்களைக் குற்றம்சாட்டியிருந்தது. அது மாற்றப்பட்டது. அதற்குப் பதிலாக இரண்டாவது குற்றப்பத்திரிகை சில இந்துக்கள் மீது குற்றம்சாட்டியது.

அந்த இரண்டு குற்றப்பத்திரிகைகளும் வெவ்வேறு மாறுமட்ட தகவல்களைக் கொண்டிருந்தன. எந்த அரசு ஒரு வழக்கில் இரண்டு வேறுபட்ட குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்? எந்த அரசு ஒரு வழக்கில் கூறப்பட்ட உறுதி செய்யப்பட்ட நேரடி சாட்சியங்களையும் அவர்களது வாக்குமூலங்களையும் மறுத்து அதற்கு எதிர்மாறான சாட்சிகளையும் வாக்குமூலங்களையும் தாக்கல் செய்யும்?

எனவே விசாரணைக்கு முன்பே வழக்கு தோல்வி அடைவது நிச்சயமாகிவிட்டது.

தொடர்ச்சி மதியம் 1 மணி பதிப்பில்...

மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு: சில கேள்விகள்

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon