மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைக்கு ஆபத்தா?

கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைக்கு ஆபத்தா?

‘கர்ப்பிணிப் பெண்கள் காபி குடித்தால், குழந்தை குண்டாகப் பிறக்கும்’ என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி குடித்தாலே இந்த பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலைக்கழகப் பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. அதில், ஒரு நாளைக்கு மூன்று வேளை காபி அருந்தினால் நல்லது என பரிந்துரைக்கப்பட்டால், அதில் தவறில்லை. உட்கொள்ளப்படுவதற்கு காபீன் ஒரு மருந்து பொருளும் அல்ல. இருப்பினும், காபீனுக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இதுகுறித்து 50,943 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்தில் காபி குடித்த பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் எட்டு வயதாகும் வரை கண்காணிக்கப்பட்டார்கள்.

ஆய்வில், குழந்தைகள் ஐந்து வயதானபோது, குறைவாக காபீன் எடுத்துக் கொண்ட தாய்மார்களைவிட அதிக காபீன் எடுத்துக் கொண்ட தாய்மார்களின் குழந்தைகள் உடல் பருமனாகக் காணப்பட்டனர்.

தேசிய உணவு ஏஜென்சிபடி, பரிந்துரைக்கப்பட்ட அளவு காபி (ஒரு நாளுக்கு மூன்று வேளை) குடித்த தாய்மார்களின் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இருப்பினும், கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது தவிர்த்து விடுவது நல்லது எனப் பேராசிரியர் வெரெனா செங்பையீல் அறிவுரை கூறியுள்ளார்.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon