மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மே 2018

யானைத் தந்தங்கள் அரசாங்கத்துக்கே சொந்தம்!

யானைத் தந்தங்கள் அரசாங்கத்துக்கே சொந்தம்!

யானைத் தந்தங்கள் யாருக்குச் சொந்தம்? கிட்டதட்ட 50 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தக் குழப்பத்துக்கான தீர்வு தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாகக் கிடைத்துள்ளது.

யானைத் தந்தங்கள் அரசாங்கத்துக்கே சொந்தம். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த குழப்பத்துக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவின் வயநாட்டில் முறையான உரிமம் பெறாத துப்பாக்கி மற்றும் துப்பாக்கியின் பாகங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, யானைத் தந்தங்களை சட்டவிரோதமாகச் சேகரிப்பது மற்றும் சேமிப்பது குறித்து 1961ஆம் ஆண்டு கேரள வனத் துறைச் சட்டம், 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது 1972ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் யானைத் தந்தங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்தியாவில் தந்தங்கள் மற்றும் அதைச் சார்ந்த பொருள்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது 1961ஆம் ஆண்டு சட்டத்தின்படி குற்றமாகும். அவை மாநில அரசுக்குச் சொந்தமானவை” என்று கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போது யானைத் தந்தங்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் சட்டவிரோதமாகத் தந்தங்களைக் கடத்துவது அதிகரிக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கேரள வனப்பகுதியின் தலைமை ஆலோசகரான ஏ.கே.தரணி கூறுகையில், “வனத்தில் இருந்து எது கிடைத்தாலும் அது அரசாங்கத்துக்குச் சொந்தமானதே” என்று தெரிவித்துள்ளார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 15 மே 2018