மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

விளையாட்டுக்காக உலகம் சுற்றும் இந்தியர்கள்!

விளையாட்டுக்காக உலகம் சுற்றும் இந்தியர்கள்!

விளையாட்டுப் போட்டிகளை ரசிக்க இந்தியர்கள் பெரும் விருப்பம் காட்டுவதால் இந்தியாவில் விளையாட்டு சுற்றுலா 10 முதல் 12 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

காக்ஸ் & கிங்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்புத் தலைவரான கரன் ஆனந்த் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “உலகளவில் விளையாட்டு சுற்றுலாத் துறை பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொழில் துறையாகும். 2017ஆம் ஆண்டில் உலகளவில் விளையாட்டு சுற்றுலாத் துறையின் மதிப்பு ஏழு பில்லியன் டாலராக இருந்தது. வெளிநாடுகளில் விளையாட்டு சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்திருந்தாலும் கூட, இந்தியாவில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு இந்தியர்களின் முதல் காதலாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை ரசிக்க இந்தியர்கள் இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் பயணிக்கின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து, ஒலிம்பிக் போன்ற மற்ற விளையாட்டுகளின் மீதும் ரசிகர்கள் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர். முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, அவ்விடங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் 10 முதல் 12 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆண்கள் குழுக்களாக வந்து விளையாட்டுகளை ரசிப்பதால் ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடச் செல்லும் ரசிகர்களில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. விளையாட்டுகளை ரசிக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களது சுற்றுலா காலத்தை சில நாள்கள் முதல் ஒரு வாரம் வரை நீட்டித்துக்கொண்டு விளையாட்டை மட்டுமல்லாமல் அப்பகுதிகளின் மற்ற சிறப்பம்சங்களையும் கண்டுகளித்து விட்டு நாடு திரும்புகின்றனர்” என்று விளக்கினார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon