மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

ஜிமெயில்: இணையச் சேவை தேவையில்லை!

ஜிமெயில்: இணையச் சேவை தேவையில்லை!

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்து சமீபத்தில் ஜிமெயிலில் புதிய அப்டேட் அறிமுகமானது. அதில் இணைய வசதி இல்லாமலேயே ஜிமெயிலைப் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கென எந்த ஒரு பிரத்யேக செயலியும் இல்லாமல் கூகுள் க்ரோமின் மூலம் இந்தச் சேவையை ஜிமெயில் வழங்கியுள்ளது.

கூகுள் க்ரோமில் இந்த சேவையைப் பெறுவது எப்படி?

இந்த சேவையைப் பெற ‘க்ரோம் 61' என்ற புதிய வெர்சனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். க்ரோமின் இந்தப் புதிய வெர்சனுக்கு மாறியவுடன் அதில் ‘செட்டிங்ஸ்’ மெனுவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஆஃப் லைன் மோடிற்குச் சென்று `Enable offline mail' என்று மாற்றிக்கொள்ள வேண்டும். இதனையடுத்து உங்கள் ஆஃப்லைன் சேவை தொடங்கிவிடும்.

பின்னர் ஆஃப்லைன் மோடில் உள்ள சேமிப்பு அளவு குறித்து நமது விருப்பத்தைக் கேட்கும். அதில் 30 நாள்கள் வரையிலான மெயில்கள் வரை பார்க்கும் வசதி டிஃபால்டாக அமைக்கப்பட்டிருக்கும். அதில் 7 நாள்கள் முதல் 30 நாள்கள் என நமக்கு விருப்பமானவற்றை மாற்றிக் கொள்ளலாம். மேலும் இதில் லாக் ஆஃப் செய்தவுடன் தானாக ஆஃப்லைன் மோடிலிருந்து வெளியே வரும்படி செட்டிங்ஸில் ப்ரைவசியைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon