மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

நாம இந்த பூமியோட புவியீர்ப்பு விசையை தாண்டணும்னா, ஒரு நொடிக்கு 11 கிலோமீட்டர் வேகத்துல பறந்தாதான் முடியும். இந்த விகிதத்தைத்தான் 'Escape velocity'னு சொல்லுவாங்க. இது எந்த கேள்விக்கான பதில்னு தெரிஞ்சதா குட்டீஸ்? ஆமா, இரண்டாவது கேள்வி!

நாம் ஏவும் ஏவுகணைகள் மட்டும் எப்படி இந்த புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளிக்குள்ளே சென்று சேருது?

ஒரு ஏவுகணை இந்தப் புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளிக்குள்ள போகணும்னா, அதற்கு அந்த ஏவுகணை நொடிக்கு 11 கிலோமீட்டர் வேகத்துல பறக்கணும். இந்த வேகத்துல பறக்கும்போது, புவியின் ஈர்ப்பு விசை, ஏவுகணையின் விசையைச் சமன் செய்ய முடியாம போயிடுது. அதனால, ஏவுகணைகள் விண்வெளிக்குப் போயிடுது.

இந்த 'Escape velocity' விகிதம் என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அது அந்த கிரகத்தோட ஈர்ப்பு விசையைப் பொறுத்தது. அது எந்தந்த கிரகத்திற்கு எவ்வளவு என்பதை இந்தப் படத்துல பாருங்க..

இப்போ யோசிச்சு பாருங்க. ஒரு பொருள், குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே போனா இந்த வேகத்துல போனா, புவியோட விசை அதுல செயல்படாது. அப்போ, விண்கலன்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் திரும்ப பூமியில விழ வாய்ப்பில்லைதானே? இப்போ முதல் கேள்விக்கான பதில் கிடைச்சிருச்சா...

இவ்வளவு சக்தி வாய்ந்த புவியீர்ப்பு விசைனால, ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குள் மட்டும்தான் செயல்பட முடியும். இந்தக் காரணத்தினால்தான், சர்வதேச விண்வெளி நிலையத்தை அது உள்ளிழுக்கவில்லை. நிலா பூமிக்குள் விழாமல் தன்னோட சுற்றுவட்டப் பாதையில சுற்றுவதற்கும், பூமி சூரியனுக்குள் விழுகாம தன்னோட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருவதற்கும் இதேதான் காரணம்.

எப்பேர்ப்பட்ட விசையாக இருந்தாலும், அதற்கு என்று ஓர் எல்லை உண்டு, விதிவிலக்குகள் உண்டு. அந்த எல்லைகளைத் தாண்டும்போது விசை செயல்படுவது இல்லை. அந்த எல்லையில் இருந்து புது விதியும், அதற்கான விசையும் ஆரம்பிக்குது.

இப்படி அறிவியல் விதிகளும் விசைகளும் தொடர்ந்துகொண்டே இருப்பதனால்தான் இந்தப் பிரபஞ்சம் சீரான அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இப்போ நம்முடைய சந்தேகங்கள் தீர்ந்ததா? என்னது? இன்னும் இல்லையா? ஆமாம்ல… இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருக்கு.

அது என்ன கேள்வி!? நாளைக்குப் பார்க்கலாம்…

நரேஷ்

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon