மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

விரும்பிய குழந்தையைக் கருத்தரிக்கலாம்!

விரும்பிய குழந்தையைக் கருத்தரிக்கலாம்!

துணைவேந்தர் சர்ச்சைக்கருத்து!

ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்டால் விரும்பிய பாலினத்தின்படி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பல்தேவ் குமார் திமான் பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக புதுடெல்லியில் நேற்று (மே 14) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பல்தேவ் குமார் திமான் ஆயுர் வேத மருந்துகளை எடுத்துக்கொண்டால் தாங்கள் விரும்பிய குழந்தையை (ஆண் குழந்தையை) கருத்தரிக்கலாம் என்று பேசியுள்ளார். அது மட்டுமின்றி அவர் ஒழுங்கான முறையில் உணவு கட்டுபாடுகளை மேற்கொண்டால் இதில் விரும்பிய விளைவுகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது அப்பட்டமான பெண் விரோத கருத்தாகும். ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது. அவர்களை இழிவாகக் கருதுவதே அவர்களின் மனப்பாங்காகும். கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கூறுவதும் ஆண் குழந்தை கருத்தரிக்க வேண்டுமா என்று பிரச்சாரம் செய்வதும் பிரி டைக்னாஸ்டிக்ஸ் டெக்னிக்ஸ் சட்டத்தின்படி (pre-diagnostics techniques act) குற்றமாகும். ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆணாதிக்க மனப்பாங்குடன் சட்டவிரோதமாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்தேவ் குமாரை உடனடியாக பதிவியிலிருந்து நீக்க வேண்டும். பல்தேவ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்.’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon