மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

கைப்பேசியில் கிருமிகள்!

கைப்பேசியில் கிருமிகள்!

தினப் பெட்டகம் 10 (15.04.2018)

மொபைல் இல்லாத யாரையேனும் பார்த்திருக்கிறோமா? நன்றாக யோசித்துப் பார்த்தாலும், யாருடைய முகமும் நினைவுக்கு வரவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை தலைகுனிந்து மொபைலைப் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும்தான் செல்கின்றனர். அந்த அளவுக்கு மொபைல் நம் வாழ்க்கையில் கலந்துவிட்டது. ‘கைப்பேசி’ என்று தமிழில் நாம் சொல்லும் இந்த மொபைல் போனைப் பற்றிய சில தகவல்கள்:

Bell Labs என்ற ஆய்வுக்கூடத்தில், கைப்பேசி ஆராய்ச்சியின்போது, Martin Cooper என்பவர் Dr. Joel Engel என்பவருக்குக் கைப்பேசியில் அழைத்தார். 1973ஆம் ஆண்டு செய்யப்பட்ட அதுவே வரலாற்றின் முதல் கைப்பேசி அழைப்பு. Motorola Dyan TAC என்பதுதான் முதல் கைப்பேசியின் பெயர்.

கைப்பேசி தொலைவது குறித்தோ, கைப்பேசி இல்லாமல் என்ன செய்வோம் என்று பதறுவதோ, சிக்னல் கிடைக்காமல் போனால் கோபத்தின் உச்சத்திற்குச் செல்வது என்று ஏதேனும் நீங்கள் செய்வீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு Nomophobia இருக்கிறது என்று பொருள்.

ஃபின்லாந்து நாட்டில், கைப்பேசியை விட்டெறிவது ஓர் அதிகாரபூர்வமான விளையாட்டு.

‘எப்போ பாரு ஃபோன்... யாரையும் கண்டுகொள்வது இல்லை’ என்ற குற்றச்சாட்டு மிகவும் பழக்கமான ஒன்று. இப்போது அதற்கு ஒரு ஆங்கிலச் சொல்லை உருவாக்கியிருக்கிறார்கள். Phubbing - கைப்பேசிக்காக நண்பர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது.

ஒரு டன் மொபைல் குப்பையில், ஒரு டன் அளவு தாதுவில் (ore) இருப்பதைவிட அதிக அளவு தங்கம் இருக்கிறதாம்.

‘நோக்கியா 1100’ என்ற மாடல் கைப்பேசிதான், உலகத்திலேயே அதிகமாக விற்றது. 250 மில்லியனுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்தது.

கழிப்பறையில் இருப்பதைவிட 18 மடங்கு அதிகமான கிருமிகள் கைப்பேசியில் இருக்கின்றன. கவனம் மக்களே...

உலகில் ஏறத்தாழ 4 பில்லியன் மக்கள் மொபைல் பயன்படுத்துகின்றனர். ஆனால், 3.5 பில்லியன் பேர்தான் பல் துலக்க toothbrush வைத்திருக்கின்றனர்.

சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு, தனது ஸ்மார்ட்போனை 110 முறை அன்லாக் செய்கிறார்.

சிறுநீரைப் பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்யும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஆஸிஃபா

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon