மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

அவெஞ்சர்ஸ் படைத்த புதிய சாதனை!

அவெஞ்சர்ஸ் படைத்த புதிய சாதனை!

‘அவெஞ்சர் இன்பினிட்டி வார்’ திரைப்படம் இந்தியாவில் வசூலில் புதிய சாதனைப் படைத்துள்ளது.

ராபர்ட் டௌளி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரூஃபல்லோ நடிப்பில் ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படம் சமீபத்தில் வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதனடிப்படையில் முதல் வாரம் ரூ.157 கோடி, இரண்டாம் வாரம் ரூ.47 கோடி வசூலித்துள்ளது. மூன்றாவது வார இறுதியில் இந்தப் படத்துக்கு ரூ.10 கோடி வசூல் கிடைத்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளைச் சேர்த்து நேற்று முன்தினம் (மே 13) வரை (வரிகள் நீங்கலாக) ரூ.214 கோடி வசூலித்துள்ளது.

இதற்கு முன் இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் தி ஜங்கிள் புக். அந்தப் படம் மொத்தமாக ரூ 261 கோடியும் வரிகள் நீங்கலாக ரூ.188 கோடியும் வசூலித்தது. இதனால் இந்தியாவில் ரூ 200 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்கிற பெருமையை அவெஞ்சர்ஸ் பெற்றுள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon