மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

செம: காமெடியில் ஒரு காதல்!

செம: காமெடியில் ஒரு காதல்!

ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஜோடி சேர்ந்திருக்கும் செம படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இளம் இயக்குநர்கள் மட்டுமல்லாது முன்னணி இயக்குநர்களின் படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகிவரும் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் செம. தொண்டன் படத்தின் மூலம் கவனம்பெற்ற அர்த்தனா, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். ‘சண்டாளி உன் அசத்துற அழகுல’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இதில் குழந்தை என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷுக்குச் சரியான துணை தேர்ந்தெடுப்பதை காமெடி கலந்த காதல் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். எல்லா பெண்களும் ஜி.வி.பிரகாஷை வேண்டாமெனச் சொல்ல அர்த்தனாவும் வேண்டாம் எனச் சொல்லுவாரா அல்லது காதலை ஏற்றுக்கொள்வாரா என்பதை சஸ்பென்ஸாக வைத்து ட்ரெய்லரை முடித்திருக்கிறார்கள். பாண்டிராஜ் எழுதியுள்ள வசனங்கள் அத்தனையும் ரசிக்கும்படியாக இருக்கின்றன.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருப்பதோடு, காதல் கலந்த காமெடி படமாக மே 25ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘செம’ ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றிப் படமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செம ட்ரெய்லர்

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon