மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

ஊதியங்கள் தாமதமாதல் குறைந்தது!

ஊதியங்கள் தாமதமாதல் குறைந்தது!

கடந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளுக்குத் தாமதமாக வழங்கப்படும் ஊதியங்களின் அளவு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளுக்குத் தாமதமாக வழங்கப்படும் ஊதியங்களின் மதிப்பு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 67,956 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக ஸ்டேட் வங்கியின் அறிக்கை கூறுகிறது. 2015-16ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தாமதமான ஊதியங்களின் மொத்த மதிப்பு 2.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2016-17ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தாமதமான ஊதியங்களின் மொத்த மதிப்பு 2.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்று ஸ்டேட் வங்கியின் அறிக்கை கூறுகிறது. அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே இவ்விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “தாமதமான ஊதியங்களின் மதிப்பு 2016ஆம் நிதியாண்டில் 2.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தாமத ஊதியங்களின் மதிப்பு 2018ஆம் நிதியாண்டில் 67,956 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. தாமதமான ஊதியங்களின் விகிதம் 2015ஆம் நிதியாண்டில் 73 விழுக்காட்டில் இருந்து 2018ஆம் நிதியாண்டில் 18 விழுக்காடாகக் குறைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon