மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

யார் ஆட்சியமைத்தாலும் காவிரியைத் தர வேண்டும்!

யார் ஆட்சியமைத்தாலும் காவிரியைத் தர வேண்டும்!

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியை அமைத்தாலும் காவிரியைத் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆர்.கே. நகரில் இன்று (மே 15) செய்தியாளர்களைச் சந்தித்த அத்தொகுதி எம்எல்ஏவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன், “ கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “அணைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரச்சினை இல்லை. அணையில் இருந்து நீரைப் பெற்றுத்தருவதுதான் மேலாண்மை வாரியத்தின் கடமை. மத்தியிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. எனவே, காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை.

குழுவோ, ஆணையமோ எதை அமைத்தாலும், அது முறைப்படி செயல்பட வேண்டும். மீண்டும் மத்திய அரசிடம் போய் நிற்க வேண்டுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக அரசு அமைந்து அவர்கள் தண்ணீர் தர மறுத்தால் மத்தியில் உள்ள பாஜக அரசு என்ன செய்யும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உச்ச நீதிமன்றம் நாளை என்ன தீர்ப்பளிக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon