கல்விக் கடனுக்குப் புதிய கட்டுப்பாடு!

தகுந்த அடமானச் சொத்துக்கள் இல்லாமல் மாணவர்கள் யாருக்கும் நான்கு லட்சத்திற்கு அதிகமான கல்விக் கடன் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தன் கல்விக் கட்டணத்தைக் கட்டத் தேவையான ரூ.63.90 லட்சம் பணத்தை பள்ளிக்கரணையின் இந்தியன் வங்கி கிளை மேலாளர் உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
மேலும், கல்விக் கடன் மூலமோ அல்லது உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டோ கல்லூரிக் கட்டணத்தை செலுத்துங்கள். இல்லையெனில் பரீட்சை எழுத அனுமதிக்க மாட்டோம் எனக் கல்லூரி சார்பில் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்தார்.