மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

‘அர்ஜுன் ரெட்டி’ நாயகனுடன் இணைந்த ரேஷ்மிகா

‘அர்ஜுன் ரெட்டி’ நாயகனுடன் இணைந்த ரேஷ்மிகா

அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் நோட்டா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடிக்கவுள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படத்தில் கன்னட நடிகை ரேஷ்மிகா மண்டானா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ரேஷ்மிகா 2016ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த ஆண்டு நாக சௌரியா உடன் ஜோடி சேர்ந்து நடித்த சலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்நிலையில் தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடிக்கும் டியர் காம்ரேட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ரேஷ்மிகா எஜமானா என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவருகிறார்.

‘டியர் காம்ரேட்’ திரைப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ படத்தின் ரீமேக் எனக் கூறப்பட்ட நிலையில், அறிமுக இயக்குநர் பாரத் கண்ணா அதை மறுத்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பொலிட்டிக்கல் டிராமா பாணியில் உருவாகும் நோட்டா திரைப்படத்தில் மெஹரின் ஃபெர்ஸாடா கதாநாயகியாக நடித்துவருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon