மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: தமிழகத்தின் டாப் மாணவர்கள்!

ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: தமிழகத்தின் டாப் மாணவர்கள்!

நாடு முழுவதும் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்டங்களில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 14) அறிவிக்கப்பட்டது.

இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வு இயக்ககம் (CISCE) என்ற தேசிய அளவிலான கல்வி இயக்ககம் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளை நடத்துகிறது. தமிழகத்தில் 77 ஐசிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் 99.79% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோன்று 43 ஐஎஸ்சி பள்ளிகளில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் 99.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐஎஸ்சி பாடத் திட்டத்தின் கீழ் எழுதிய தேர்வில் மதுரையில் உள்ள ஜீவனா பள்ளி மாணவி ஹரிணி.வி 96.2% மதிப்பெண் பெற்றுள்ளார். நாகர்கோவிலை அடுத்த மார்த்தாண்டத்தில் சேக்ரட் ஹார்ட் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த அகில் லிஷா ராஜன் 98 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த அஸ்வின் ஜிந்த் 98 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியைச் சேர்ந்த அந்தாரா ராஜலட்சுமி ராஜ்குமார் 97.8% மதிப்பெண் எடுத்துள்ளார். மேலும் வேலூரில் உள்ள ஐடிஏ ஸ்கட்டர் பள்ளியைச் சேர்ந்த விஷ்வாஸ் 97.8% மதிப்பெண் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு 12ஆம் வகுப்புத் தேர்வில் 96.47 சதவிகிதம் பேரும், 10ஆம் வகுப்பில் 98.53 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றிருந்தனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நாளை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon