மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: பலாச்சுளை அல்வா!

கிச்சன் கீர்த்தனா: பலாச்சுளை அல்வா!

பண்ருட்டினாலே பலாப்பழம்தான் ஃபேமஸ். கோடைக்காலம் வந்தவுடனே பலாப்பழம் சீசன் ஆரம்பமாகிவிடும். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருந்தாலும், அதில் உள்ள பலாச்சுளை அறுசுவைகளில் ஒன்றான இனிப்புச் சுவை சற்று கூடுதலாகவே இருக்கும். அதை அல்வாவாகச் செய்து சாப்பிடலாம் வாங்க...

தேவையானவை:

பலாச்சுளை – 16, சீனி - ஒன்றரை கப், நெய் - 4 மேஜைக்கரண்டி.

செய்முறை:

பலாச்சுளையில் உள்ள கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையைப் போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். 20 நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

சுவையான பலாச்சுளை அல்வா ரெடி.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon