மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஐபிஎல்: உமேஷ் வேகத்தில் சரிந்த பஞ்சாப்!

ஐபிஎல்: உமேஷ் வேகத்தில் சரிந்த பஞ்சாப்!

ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவின் சிறப்பான பந்து வீச்சினால் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு தனது ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இரு அணிகளின் மாற்றங்கள்

கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத முஜீப் ஜத்ரானுக்கு இந்தப் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டானிஸ் இடம்பிடித்திருந்தார். பெங்களூரு அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்த சீசனில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கே.எல்.ராகுல் - கிறிஸ் கெயில் ஜோடி இந்தப் போட்டியில் சொதப்பியது. ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் இருவரும் உமேஷ் யாதவ் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவரைக்கூட முழுமையாக ஆட முடியாமல், 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்குச் சுருண்டது. ராகுல் (21), கெயில் (18), ஆரோன் பின்ச் (26) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

எளிய இலக்கைத் துரத்திய விராட் கோலி - பார்திவ் படேல் ஜோடி, 8.1 ஓவர்களில் பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. விராட் கோலி 48 ரன்களும், பார்திவ் படேல் 40 ரன்களும் எடுத்திருந்தனர். சிறப்பாகப் பந்துவீசிய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon