மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

முடிவுக்கு வந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ குழப்பம்!

முடிவுக்கு வந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ குழப்பம்!

அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் உறுதியான வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக் குழு அறிவித்துள்ளது.

அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். ஜனவரியில் ரிலீஸாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தள்ளிப்போய்விட்டது.

தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஒரு படம் 5 முறை தள்ளிப்போனது என்றால் அது பாஸ்கர் ஒரு ராஸ்கல்தான். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி, மார்ச் 29ஆம் தேதி, ஏப்ரல் 27ஆம் தேதி, மே 11ஆம் தேதி ஆகிய தேதிகளில் வெளியாவது தள்ளிப்போனது. பட வெளியீட்டின் தாமதத்திற்கு அரவிந்த் சாமியும், அமலா பாலும் தங்களது வருத்தங்களைத் தெரிவித்தினர். அரவிந்த் சாமி படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை இனி அறிவிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைப் படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர் .

மே 18ஆம் தேதி விஜய் ஆண்டனியின் காளி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதற்கு ஒரு நாள் முன்பாகவே பாஸ்கர் ஒரு ராஸ்கல் மே 17ஆம் தேதி வெளிவருகிறது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon