மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 12 டிச 2019

தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு!

தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு!

தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்தார்.

அணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் தலைமையிலான இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் ராம.பழனியப்பன், பி.வி.சீனிவாசராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon