மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஸ்டெர்லைட்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!

ஸ்டெர்லைட்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதற்கிடையே ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினைத் தொடங்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், கிராம மக்களுக்கு நோய்கள் பரவுவதாகவும் கூறி, ஆலை விரிவாக்கத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று (மே 14) 92ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 15) நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக எந்த அனுமதியும் வழங்கவில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon