மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

கதையின் நாயகியான ஐஸ்வர்யா

கதையின் நாயகியான ஐஸ்வர்யா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிவருகிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் இன்று (மே 15) வெளியாகியுள்ளன.

குறுகிய காலத்திலேயே சிறந்த நடிப்பால் கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடி நடித்துவரும் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் புதிய படத்தை சிவகார்த்திகேயன் முதன்முறையாகத் தயாரிக்கிறார். பிரதான வேடம் ஏற்று அவர் நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரும், பல்கலை வித்தகருமான 'நெருப்புடா' பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் இதை இயக்குகிறார்.

இன்று (மே15) படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டுள்ளார். படத்துக்கு ’கனா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் சப் டைட்டிலாக ’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிற வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரின் முகங்களும் காட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது.

இதுதான் தனது முதல் தயாரிப்பு என தற்போது சிவகார்த்திகேயன் சொன்னாலும் '24ஏ.எம்' நிறுவனம் அவருடையதுதான் எனவும், அவர் நடித்த 'ரெமோ' படத்தையே அவர்தான் திரைமறைவிலிருந்து தயாரிக்கிறார் எனவும் கோலிவுட்டில் பேசப்பட்டது. ஆனால் 'ரெமோ' பட விழா ஒன்றில் மேடையேறிய சிவகார்த்திகேயன், ''நான் அந்தப் படத்தைத் தயாரிப்பதாகச் சொல்வது முற்றிலும் பொய். 'ரெமொ' படத்தை நான் எடுத்திருந்தால், கண்டிப்பாக இவ்வளவு பிரம்மாண்டமாக செலவு செய்திருக்க மாட்டேன்" எனச் சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon