மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி

மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி

கட்சி பணிகள் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி செயலாளர்களுடன் மே 20ஆம் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

கடந்த 10ஆம் தேதி அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர்கள், “பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. உள்கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கினார்” என்று தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் (மே 13) நடைபெற்றது.

அப்போது மக்கள் பிரச்சனைகள் , அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை ரஜினியிடம் ஆலோசிக்கப்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இன்று( மே15) ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை வரும் மே 20 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாகவும், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon