மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

லோக்பால்: தலைமை நீதிபதி நியமனம்!

லோக்பால்: தலைமை நீதிபதி நியமனம்!

மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்கியை லோக்பாலின் தலைமை நீதிபதியாக நியமிப்பதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 15) தெரிவித்துள்ளது.

பிரதமரின் கீழ் இயங்கி வரும் ஊழல் ஒழிப்பு நீதிமன்றமான லோக்பாலுக்கு முகுல் ரோத்கியை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கோரிய வழக்கு, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். அப்போது லோக்பாலின் தலைமை நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டதாகவும், இந்த முடிவு கடந்த 11ஆம் தேதியன்றே எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகளிடம் வேணுகோபால் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை மாதம் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக லோக்பாலின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த பி.பி.ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். இதனையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. காலியாக உள்ள லோக்பால் தலைமை நீதிபதி பதவியை உடனடியாக நிரப்பாததால் கடந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon