மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

குமாரசாமி, எங்கயோ கேட்ட பேரு: அப்டேட் குமாரு

குமாரசாமி, எங்கயோ கேட்ட பேரு: அப்டேட் குமாரு

ஓட்ட பந்தயத்துல கடைசியா வந்துட்டு முதல் பரிசு வாங்குறதுக்குலாம் ஒரு குருட்டு யோகம் இருக்கனும். பெர்சண்டேஜ் அதிகமா கிடைச்சவங்களுக்கு சீட் கிடைக்கலை. சீட் அதிகமா கிடைச்சவங்களுக்கு பெர்சண்டேஜ் கிடைக்கலை. ரெண்டும் கம்மியா இருந்த குமாரசாமியை முதல்வராக்குற நிலைமை வந்திருக்கும் போது உண்மையிலேயே கேம் சூடாகிருச்சு. சரி நமக்கு பாலிடிக்ஸ் எதுக்கு காவேரி தான் வேணும். பாஜக வந்தா தண்ணி வந்துரும்னு ஒரு குரூப் சொன்னாங்க. இப்ப அவங்கள்ட்டையும் கேட்க முடியாது. காங்கிரஸ்காரங்கள்ட்டயும் கேட்க முடியாது. ஆக மொத்தம் இந்த தடவையும் நாம தான் அவுட்டா.. எப்ப என்ன நடக்கும்னு தெரியாது யாரு எந்த பக்கம் போறாங்கன்னு இப்ப தெரியாதுங்குறாங்க.. அதுக்காக குடத்தோட கிளம்பிடாதீங்க. யாரு வந்தாலும் காவேரி மட்டும் வராதாம்.. அப்டேட்டை பாருங்க என்ன ரேட் பிக்ஸ் பண்ணிருக்காங்கன்னு கேட்டுட்டு வாரேன்..

@aselviku

150 தொகுதியில் ரஜினிக்கு செல்வாக்கு- பத்திரிக்கை செய்தி.!

இதைக் கேட்டு ரஜினியே குபீர்னு சிரிச்சுட்டாராம்..

@RK_twitz7274

நீட் தேர்வில் 180-ல் 49 கேள்விகள் தவறானவை; பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

// ஒவ்வொரு மாநில மாணவர்களையும் வெளிநாட்ல போயி எழுத சொல்லுவார்!!

@Arjundreams43

குமாரசாமி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு.

கொளுத்திபோட்ட வெடியெல்லாம்

புஸ்வானமா போய்டுமோ.

@ajmalnks

அந்த குமாரசாமி கணக்கால் ஜெயலலிதாவுக்கு அரசியலில் திருப்பம் சிறிது காலம் கிடைத்தது.

இந்த குமாரசாமி கணக்கால் காங்கிரஸுக்கு கர்நாடகாவில் திருப்பம் கிடைத்தது.

குமாரசாமி கணக்கில் பெரிய சாமிகள்தான்.

@ShivaP_Offl

15லட்ச ரூபா எங்க பேங்க் அக்கவுண்ட்ல போடுலைனாலும் பரவாயில்லை,

15லட்ச ரூபாய்க்கு ஸ்டேட்பேங்க் வட்டிபோட்டு,அந்த வட்டியை மட்டும் எங்க அக்கவுண்ட்ல போட்டா போதும்,

அசல நாங்க அப்புறம் வாங்கி கொள்கிறோம்,

@ShivaP_Offl

நல்லதெல்லாம் கனவுல மட்டும்தான் நடக்குது,

கெட்டதெல்லாம்தான்

நேர்ல நடக்குது...!!

@qif_wat

EVMல தில்லு முல்லுன்றது உண்மைனா காங்கிரஸ் ஒருவேளை (?) பிற்காலத்துல ஆட்சிக்கு வந்தா EVMஐ ஒழிச்சிட்டு வாக்குச்சீட்டுல தேர்தல் வைக்கனும்

@Arjundreams43

அரசியல்வாதிகளால் அதிகம் கூறப்பட்ட ஆரூடம்

"காவிரி தமிழகத்தில் விரிந்தோடும்" என்பதாகத்தான் இருக்கும்.

@thoatta

மோடி ட்விட் பண்ணாதப்பவே ஏதோ ட்விஸ்ட் இருக்கும்னு தோணுச்சு

@Anandh_offl

இப்ப பாறேன் ஒரு அக்கா வந்து தமிழ்நாட்டுல தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லும்..

@vignesh7773

“தென்னிந்தியாவில் பிரம்மாண்ட நுழைவிற்கான மணியோசை போல் கர்நாடகாவில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துகிறேன்” - OPS

முழுசா பாஜக பக்தாவா மாறி இருக்கிற ஒபிஸ் பார் !

@vishnut87

எடப்பாடிய சிஎம் ஆ கொண்டிருக்கும் நீ எல்லாம் எடியூரப்பாவ நக்கல் பண்ணலாமா ன்னு என் மனசாட்சி பலமா துப்பிடுச்சி ப்ரெண்ட்ச்

@writter_vambu

வேலை தேடுறதோட கஷ்டமான விஷயம்

சென்னைல கம்பெனி அட்ரஸை தேடி கண்டிபிடிக்கிறது!

@Ameer Abbas

சினிமா உதவி இயக்குநர் ஒருவர் இறந்துவிட்டால் அவர் நேரடியாக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்.

ஏனென்றால் ஒருவனை இரண்டு முறை நரகத்திற்கு அனுப்ப கடவுளுக்கே அதிகாரம் கிடையாது.

- கவிஞர் கண்ணதாசன்

@Elambarithi Kalyanakumar

எங்க போறோம்னு தெரியாமலே போய்ட்ருக்க மனச அது போக்குலயே விட்றணும்.

நம்ம மனசுக்கே நாம சுதந்திரம் குடுக்கலன்னா வேற என்ன சந்தோஷமா இருந்துடப் போறோம்.

@MuruGesh

பாஜக ஆட்சி அமைப்பது போல் வந்தது.. அவசரப்பட்டு ஸ்டாலின் வாழ்த்து சொன்னார். திசை திரும்பியது தேர்தல் முடிவு...

மோடியா கெத்து.. கெத்துடா எங்க செயல்தலைவர்..

- இப்படிக்கு ஒரு திராவிடவித்து...

@kaviintamizh

பாஜக ஒவ்வொரு மாநிலமா ஜெயிக்க ஜெயிக்க தான் தமிழ்நாட்டுல அவங்க ஜெயிக்க கூடாதுங்கிற எண்ணம் அதிகமாயிட்டேயிருக்கு.‌. இங்க கொடுக்கிற ஒவ்வொரு அடியும் மொத்த இந்தியாவுக்கானதா இருக்கும்..

@iGhillli

நாங்க வேணா எங்க MLA 10 பேரை அனுப்பி ஆதரவு தரட்டுங்களா

-தமிழக இரட்டையர் டூ பிஜேபி..

@saththukutty

தமிழ்நாடு: அடப்பாவி!!! உங்களால இந்த துக்கத்திலும் எப்படி சிரிக்க முடியுது????

கர்நாடகா : எங்களுக்கே இந்த நிலைமை னா.. அடுத்து உங்களுக்கு தானே...

ஹையோ!!! ஹையோ!!!

@இளையராஜா சே

இவனுங்க எல்லோரும் தப்பா செய்தியை திணிச்சிட்டு, இப்ப திடீர் திருப்பம் சொல்ரானுங்க..

@Jeyachandra Hashmi

என்னடா எல்லாரும் கர்நாடக மக்கள திட்டிட்டு இருக்கீங்க ?

அவனாச்சும் டைரக்ட்டா பி.ஜே.பி க்கு ஓட்டு போட்ருக்கான். திரும்பி நம்மள பாத்து உங்கூர்ல யார் ஆட்சின்னு கேட்டா மூஞ்சிய எங்க வச்சுப்போம் ??

@Don Vetrio Selvini

என்ன அமித், கோவால நாம பண்ணத , கர்நாடகாவுல நமக்கே திருப்பி பண்றாங்க .

ஜி, கவலைப்பட வேண்டாம். கவர்னர் நம்ம ஆளு..

@Surya Thozhar

ஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் ஓடுனாங்க.

ஆனா யாருக்கும் முதல் பரிசு கிடைக்கல.

பரிசு பெற்றவர் யாருன்னு பார்த்தா ஓடி வந்தவங்கள படம் பிடித்துக் கொண்டு ரிவர்சில் வந்த கேமரா மேன் தான்.

காங்கிரசும் இல்லை

பீஜேபீயும் இல்லை

குமாரசாமி தான் முதலமைச்சர்

எடத்தக் காலி பண்ணுங்க.

@Shyam Sundar

மலர்ந்து மலராத பாதி மலர் போல...

தாமரை

-லாக் ஆஃப்

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon