மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

நோட்டாவிடம் தோற்ற அதிமுக!

நோட்டாவிடம் தோற்ற அதிமுக!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடந்தது மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது. சட்டப்பேரவை தேர்தலில் சின்னங்களை ஒதுக்குவதற்கான வேட்புமனு பரிசீலனை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. கர்நாடகாவில் அதிமுக அங்கிகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் மறுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 'இரட்டை மின்விளக்கு கம்பம்' சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இன்று (மே 15) வெளியான தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பாக போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களுமே நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று டெப்பாசிட் இழந்துள்ளனர்.

காந்திநகரில் போட்டியிட்ட யுவராஜ் 545 வாக்குகளும், ஹனூர் தொகுதி வேட்பாளர் விஷ்ணுகுமார் 503 வாக்குகளும், தங்கவயல் தொகுதி வேட்பாளர் அன்பு 1024 வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon