மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 16 டிச 2019

மனநலம் பாதித்தோரை ஒப்படைக்கும் திட்டம்!

மனநலம் பாதித்தோரை  ஒப்படைக்கும் திட்டம்!

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை களப்பணி மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சையளித்து மீண்டும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் புதிய திட்டம், நடப்பாண்டு முதல் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் இன்று (மே 15) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற மனநல மருத்துவமனைகளில், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க உள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் கூடுதலாக 10 பணியிடங்கள் ஒதுக்கி, அதற்கு மருத்துவர்களை நியமிக்க உள்ளோம்.

அவர்கள் நேரடியாக கள ஆய்வுக்குச் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, மாவட்ட மனநல அமைப்பில் அவர்கள் இணைக்கப்படுவார்கள். பின்னர் மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திப் பெற்றோரிடம் ஒப்படைக்கக் கூடிய புதிய முயற்சியை நடப்பாண்டு முதல் தொடங்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon