மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

கர்நாடகா: வீழ்ந்த அமைச்சர்கள்!

கர்நாடகா: வீழ்ந்த அமைச்சர்கள்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் சித்தராமையாவின் 30 பேர் கொண்ட அமைச்சரவையில் சுமார் பதினைந்து அமைச்சர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்றுவிட்டார். ஆனால், பாதாமி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரது அமைச்சரவை சகாக்களில் முக்கியமானவர்களான போக்குவரத்துத் துறை அமைச்சர் ரேவண்ணா, உயர் கல்வித் துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, விவசாயத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன், சிறுதொழில் துறை அமைச்சர் கீதா மாதவ பிரசாத், பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவப்பா, பிற்பட்ட்டோர் நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் உள்ளிட்ட பதினைந்து அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அதேநேரம் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான அமைச்சர் சிவக்குமார் தான் போட்டியிட்ட கன்னபுரா தொகுதியில் 79 ஆயிரத்து 909 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மாநிலத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே மூன்றாவது பணக்காரரான சிவக்குமார், இதே தொகுதியில் 2008, 2013 தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.

சித்தராமையா அமைச்சரவையின் மீது மக்கள் எவ்வித அதிருப்தியில் இருந்தார்கள் என்பதை தோல்வி அடைந்த அமைச்சர்களே எடுத்துக் காட்டுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது பாஜக.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon