மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

வளங்களை அழித்தால் வளர முடியாது!

வளங்களை அழித்தால் வளர முடியாது!

அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவைகளைச் சந்திக்க வேண்டுமென்றால், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 விழுக்காடு வேகத்தில் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்று நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்யும் போக்கு மேலும் தொடர்ந்தால், போதிய வளர்ச்சியை எட்ட இயலாது என்றும் அமிதாப் காந்த் எச்சரித்துள்ளார். போக்குவரத்தில் தொல் படிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உயிரியல் எரிபொருட்களைப் பயன்படுத்துவது நல்ல முயற்சியாக இருக்கும் என்று நிதி ஆயோக்கின் ஆய்வு ஒன்று பரிந்துரைப்பதாக அமிதாப் காந்த் கூறினார். மே 14ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற எஃப்.ஐ.சி.சி.ஐ.யின் பொருளாதாரக் கருத்தரங்கில் நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்த் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்.

அமிதாப் காந்த் மேலும் பேசுகையில், “அழிந்துவிடக் கூடிய இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக, மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். கட்டுமானத் துறையில் புதுப்பிக்கத்தக்க பொருட்களைப் பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறினார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon