மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

பெண் குழந்தைகள் அதிக அளவில் மரணம்!

பெண் குழந்தைகள் அதிக அளவில் மரணம்!

இந்தியாவில், பாலினப் பாகுபடுத்துதலின் காரணமாக 5 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகள் அதிக அளவில் மரணமடைந்துவருகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெண் குழந்தைகள் மரணங்கள் குறித்து லான்சாட் குளோபல் ஹெல்த் என்ற நாளிதழ் ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்தியாவில்,மொத்த 35 மாநிலங்களில் 29 மாநிலங்களிலுள்ள ஐந்து வயதுக்கு கீழுள்ள 2,93,000 பெண் குழந்தைகள் மரணமடைந்து வருகின்றன என லான்சாட் குளோபல் ஹெல்த் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவித்துள்ளது. பத்தாண்டுகளில் 2.4 மில்லியன் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் நாட்டின் 90 விழுக்காடு மாவட்டங்களில் கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

பாலினப் பாகுபாடு காரணமாக ஐந்து வயதுக்கு கீழுள்ள 22 விழுக்காடு பெண் குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக முன்னணி எழுத்தாளர் நந்திதா சைகி(Nandita Saikia) என்பவர் தெரிவித்துள்ளார். அதிகமான மரணங்கள் காரணமாக பாலின விகிதம் வேறுபடுகிறது. அதாவது,ஆண் குழந்தைகளை ஒப்பிடும்போது பெண் குழந்தைகளே அதிகளவில் மரணமடைகின்றன.

இந்தியாவில் மரணமடையும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அறிய, பாலினப் பாகுபாடு உள்ள இந்தியா போன்ற நாடுகளுடன் பாலினப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படாத 46 நாடுகளுடன் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு ,ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பெண் குழந்தைகள் மரணங்கள் குறித்த ஆய்வானது ,பெரும்பாலும் பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

2017 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், இந்தியாவின் பாலின விகிதம் 2004-05 இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளாக இருந்தது 2015-16 இல் 919 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆய்வில் பிறப்புக்கு பின்பு ஏற்படும் மரணங்கள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பெண் குழந்தைகள் மரணங்கள் இந்தியாவின் வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம்,பிகார்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம் அதிகளவில் நிகழ்கின்றன. ஏனெனில், இந்த மாநிலங்களில்தான் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் பெண் குழந்தைகளின் மரணங்கள் ஆண் குழந்தைகளை ஒப்பிடும்போது மூன்றில் இரண்டு பங்கு உள்ளது.

உத்தர பிரதேசத்தில், 30.5 விழுக்காடும் , பிகாரில் 28.5 விழுக்காடும் , ராஜஸ்தானில் 25.4 விழுக்காடும் , மத்திய பிரதேசத்தில் 22.1 விழுக்காடும் பெண் குழந்தைகள் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில், குறைந்த கல்வியறிவு குறைவாக உள்ள விவசாயப் பகுதிகள், அதிகமான மக்கள் தொகை, குறைந்த சமூக பொருளாதார மேம்பாடு, கருவுறுதலுக்கு அதிகமான வாய்ப்புகள் போன்ற காரணங்களால்தான் பெண் குழந்தைகளின் மரண விகிதம் அதிகமாகவே இருக்கிறது

விருப்பமில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்வது அதனைத் தொடர்ந்து அந்த குழந்தையை புறக்கணிப்பது மற்றும் தேவையற்ற கருத்தரிப்பு போன்ற காரணங்களால் ஐந்து வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகள் அதிகளவில் மரணமடைகின்றன.

இதே நிலை நீடித்தால், 20 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட பாலின அடிப்படையிலான பாகுபாடு அதிகரிக்கலாம் என சைகியா கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 21 பெரிய மாநிலங்களில் பாலின விகிதம் 10 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்துள்ளதாகக் கடந்த பிப்ரவரி மாதம் நிதி ஆயோக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், நாடு முழுவதும் பெண் குழந்தையின் மதிப்பை ஊக்கப்படுத்தும் முறையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். பெண்ணின் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதனை செய்து, கருக்கலைப்பு செய்வதனால் பெண் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon