மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 ஜுன் 2018

குடை சாய்ந்த கோபுரம்!

குடை சாய்ந்த கோபுரம்!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 10

ரஜினிகாந்த் ரசிகர்களும், தமிழக அரசியல்வாதிகளும் எதிர்பார்த்த காலா நேற்று (ஜூன் 7) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிவிட்டது.

ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்றாலே சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத் துள்ளல் இருக்கும், அதனுடைய எதிரொலி தியேட்டர்களில் டிக்கட் விற்பனையில் இருக்கும். அது காலாவுக்கு இல்லை.

கபாலி முதல் நாள் அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நகரங்களில் ஓடியது.

நகராட்சிகளிலும், பெரு நகரங்களிலும் முதல் நாள் ரஜினி படம் ஹவுஸ்புல் ஆகிவிடும். சென்னை, கோவை , சேலம் ஆகிய நகர்களில் உள்ள மால் தியேட்டர்களில் மட்டும் காலா படம் சிறப்புக் காட்சி, ரெகுலர் காட்சிகளில் அரங்கு நிறைந்து காணப்பட்டது.

சென்னை நகரத்தில் காலா படத்திற்கு இருந்த நெருக்கடி வேறு எங்கும் இல்லை. காலா போட்டால் கல்லா கட்டிவிடலாம் என்று கனவு கண்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு காலா கானல் நீராகிவிட்டது.

திரைத்துறை வேலை நிறுத்தத்துக்குப் பின் வந்த பெரிய படம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, இரும்புத் திரை போன்ற படங்களுக்கு இருந்த ஓப்பனிங் காலாவுக்கு இல்லாமல் போனது.

ரஜினி படம் ரிலீஸ் என்றால் அதிகாலை சிறப்புக் காட்சி, ரசிகர் மன்ற காட்சிகள் அவசியம் இருக்கும். சிறப்புக் காட்சி, ரசிகர் மன்ற காட்சிகளுக்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த அனைவருக்கும் 40% நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை, சிறப்புக் காட்சிகளுக்குப் பின் காலா படம் திரையிட்ட புறநகர் திரையரங்குகள் அனைத்தும் வெறிச்சோடியே காணப்பட்டன.

காலா படம் திரையிட்ட திரையரங்குகளில் நேற்று பிற்பகல் வசூல் நிலவரம் கேட்கத் தொடங்கியபோது, தியேட்டர் நிர்வாகிகள் சோர்வான மனநிலையில் பேசினார்கள். ஒரு வாரத்துக்கு இந்தப் படத்தை எப்படி ஓட்டி அசல் எடுப்பது என்ற ஆதங்கக் குரல்களை எல்லா இடங்களிலும் கேட்க முடிந்தது.

காலா படத்தை படைப்பு ரீதியாகப் பாராட்டியும் குறைகூறியும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தாலும் தியேட்டருக்கு காலா படம் பார்க்கக் குடும்பத்துடன் வருவதற்கு அஞ்சுகின்றனர் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்ற பயத்தில்.

மொத்தத்தில் காலாவுக்கு ஓப்பனிங் இல்லை, வசூல் மந்தமாக இருக்கிறது என்கிற கேள்விக்கு பெரும்பான்மையோர் சொன்ன பதில் இதுதான்:

வியாழக்கிழமை என்பது தமிழ் சினிமாவுக்கு ரிலீஸுக்கு உகந்த நாள் இல்லை,

மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளி, கல்லுரி சேர்க்கையில் தீவிரமாக இருக்கும் நேரம் இது. இஸ்லாம் மக்கள் நோன்பு இருப்பதால் படம் பார்க்க வரமாட்டார்கள்,

இவற்றைக் காட்டிலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆதரித்து ரஜினி பேசிய பேச்சு தென் மாவட்டங்களில் காலா படத்தின் வசூலை காவு வாங்கிவிட்டது.

படத்தின் உண்மையான வசூல் நிலவரம், எதை நோக்கி காலா வசூல் இருக்கும் என்பதையெல்லாம் திங்கள் கிழமைதான் தீர்மானிக்க முடியும்.

22 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட காலாவின் முதல் நாள் மொத்த வசூல் சுமார் எட்டுக் கோடியே எண்பத்தி எட்டு லட்சம் என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.

குடை சாய்ந்த கோபுரம்: ஏன், எப்படி? நாளை பகல் 1 மணிக்கு…

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

வெள்ளி, 8 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon