மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கோவையில் வெளுத்த காலா சாயம்!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 15

காஞ்சிவரம் திரைப்படத்தில் நடித்திருந்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டிருந்ததைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகச் சென்னையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெளிந்த நீரோடையாக பேசினார் பிரகாஷ்ராஜ். “கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் போட்டிக்கு அனுப்பபட்ட படங்களின் அடிப்படையில் நான் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன்.போட்டிக்கு அனுப்பப்படாத படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் இருக்கலாம், இந்த விருது நான் மட்டுமே சிறந்த நடிகன் என்பதற்கான விருது இல்லை, தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து ஒவ்வொரு ஆண்டும் போட்டியில் கலந்துகொண்டு விருதை வெல்ல எவராலும் இயலாது” என்றார் பிரகாஷ்ராஜ்.

சினிமாவில் இது நடிப்புக்கு மட்டுமல்ல அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு வருடமும் சூப்பர் ஸ்டார்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், சாதனை நிகழ்த்திவிட்டு ஆர்ப்பாட்டம் இன்றி தங்கள் வேலையில் கவனம் செலுத்தியவர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பிரம்மாண்டம் இன்றி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்குகளின் கல்லாவை நிரப்பிய படங்களில் நடித்த மோகன் சாதனையை இன்று வரை சூப்பர் ஸ்டார், உலக நாயகன்களால் சமன் செய்ய முடியவில்லை.

தமிழ் சினிமா தொடக்க காலத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த முதல் மூன்று படங்களும் தொடர்ந்து வெற்றிபெற்றன. அந்த சாதனையை எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, அஜித், விஜய் என யாரும் முறியடிக்கவில்லை. துள்ளுவதோ இளமையில் அறிமுகமான நடிகர் தனுஷின் அடுத்த படங்களான காதல் கொண்டேன், திருடா திருடி ஆகியவையும் வசூல் சாதனை நிகழ்த்தின. அவரால் தியாகராஜ பாகவதரின் சாதனை சமன் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 3 படங்களில் நடித்து சூப்பர் வசூலை அள்ளும் நடிகர்கள் நம்மிடையே இல்லை. அது சூப்பர் ஸ்டார் என ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கும் பொருந்தும்.

ரஜினிகாந்த் நடித்த படம் வருடத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டால் வசூல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது.

ஒரு பொருள் எப்போதாவது ஒரு முறைதான் கிடைக்கும் என்றால் அதனை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும் என்ற விருப்பம் பணம் உள்ளவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

இதுதான் ரஜினிகாந்த் படங்களின் வசூல் பலம். அதுவே காலா படத்தில் ஆட்டம் கண்டுள்ளது.

விநியோகஸ்தர் மூலமாகத் தயாரிப்பாளருக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் சுமார் 40 கோடி. ரஜினியின் சம்பளமோ 60 கோடி என்கிறார்கள்.

கொங்கு மண்டலமான கோவை விநியோகப் பகுதியில் 82 திரைகளில் காலா திரையிடப்பட்டது. முதல் நாள் பெரும்பான்மையான திரைகளில் ஐந்து காட்சிகள் திரையிட்டதில் மொத்த வசூல் 1 கோடியே 80 லட்சத்து 50,000 என்கிறது விநியோக வட்டாரம்.

மேற்கண்ட தகவல் அடிப்படையில் கோவை விநியோகப் பகுதியில் மூன்று நாட்களில் 4 கோடிவரை வசூல் ஆகியிருக்ககூடும் என்பதே விநியோகஸ்தர்களின் கணக்கு.

பிரதான ஆற்றில் தண்ணீர் பொங்கி பிரவாகம் எடுக்காதபோது கிளை நதிகளில் தண்ணீர் எப்படிப் பாய்ந்தோடும்? தமிழகத்திலேயே அதிகமான வசூலைத் தரக்கூடிய கோவை ஏரியா வசூலே வறுமைக் கோட்டை தாண்டாமல் தடுமாறிக்கொண்டிருக்கையில் கிளை நதிகள் வறண்டு போகத்தானே செய்யும்.

10 கோடி ரூபாய்க்கு விநியோக உரிமை வாங்கப்பட்ட கோவை பகுதியில் கடந்த சில நாட்களாகப் பருவ மழை காரணமாக காலா வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்ட பகுதி கோவை ஏரியா. சென்னை நகரத்துக்கு அடுத்தபடியாக கோவை திருப்பூர் மாவட்டங்களில் இந்தியாவின் பன்முகம் இருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களும் தமிழகம் முழுவதுமிருந்து வேலை நிமித்தமாக இங்கு கூடுவதால் திரைப்படங்களின் வெற்றி தோல்வியை கோவை ஏரியா வசூலை கொண்டு முடிவு எடுக்க முடியும்.

அங்கேயே காலா மொத்த வசூலில் 8 கோடியை கடப்பது கஷ்டம் என்கின்றனர். இரண்டாவது வாரம் பெரும்பான்மையான ஊர்களில் காலா கழட்டிவிடப்பட்டுப் புதிய படங்கள் திரையிடப்படும் என்கின்றனர்.

தமிழகத்தில் காலா படத்தின் தியேட்டர் வருவாயில் 6 கோடி ரூபாய் கோவை ஏரியாவின் பங்காக இருக்கும்.

கொங்கு மண்டலத்துக்கு இணையாக வசூலைக் குவிக்கும் செங்கல்பட்டு ஏரியா வசூல் நிலவரம் நாளை பகல் 1 மணிக்கு

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon