மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜுன் 2018

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 17

ரஜினிகாந்த் நடித்த படத்தின் ஏரியா உரிமை வாங்குவதற்குக் கடுமையான போட்டி இருக்கும். அப்படி ஒரு போட்டி இல்லாத ஏரியா வட ஆற்காடு விநியோகப் பகுதி என்பது வெளி உலகுக்குத் தெரியாது.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடங்கிய வட ஆற்காடு திரைப்பட விநியோகப் பகுதியில் புதிய படங்களை வாங்கக்கூடிய விநியோகஸ்தர்கள் இல்லை.

இப்பகுதியில் உள்ள திரையரங்குகளில் 80 சதவீதத் திரையரங்குகளை எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசன் குத்தகைக்கு எடுத்து நவீனப்படுத்தி நடத்திவருகிறார்.

புதிய படங்களை எம்.ஜி. அடிப்படையில் சீனிவாசன் திரையிடுவதில்லை. உங்கள் படத்தின் மீது நம்பிக்கை இருந்தால் திரையிடுங்கள். தியேட்டர் பங்குத் தொகை போக வருவதை எடுத்துச் செல்லுங்கள், அட்வான்ஸ் தருகிறேன் என்பது இவரது கொள்கை.

அதனால் பெரும்பான்மையான புதிய படங்கள் விநியோக அடிப்படையில் அல்லது திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து தரக் கூறி சீனிவாசனிடம் வந்துவிடுகின்றன.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு வசூல் மூலம் இந்த ஏரியாவில் 4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருந்தது. தமிழகத்தின் பிற ஏரியாக்களின் வியாபாரம் முடிக்கப்பட்ட நிலையில் வட ஆற்காடு ஏரியா உரிமையை லைக்கா நிறுவனம் கூறிய 6 கோடிக்கு வாங்குவதற்கு எவரும் தயாராக இல்லை.

வேறு வழி இன்றி சீனிவாசனிடம் படத்தை விற்க முயற்சித்தது லைக்கா. விநியோக உரிமை என்றால் வாங்கத் தயார், நீங்கள் சொல்லும் தொகைக்கு இல்லை நான் கேட்கும் விலைக்கு என்றால் தயார் என்றார் சீனிவாசன்.

6 கோடிக் கனவில் இருந்த லைக்கா தியேட்டர் மட்டும் கன்பார்ம் செய்து தரும்படி வேண்டுகோள் வைத்தது. லைக்கா ரிலீஸ் செய்த படங்களைத் திரையிட சீனிவாசன் கொடுத்த அட்வான்ஸ் பணத்தில் பாக்கி லைக்கா நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தது. அத்துடன் கூடுதலாக 1.5 கோடி ரூபாய் கொடுத்து வட ஆற்காடு பகுதியில் திரையரங்குகளை ஒதுக்கீடு செய்துகொடுத்தார் சீனிவாசன்.

வேலூர் நகரத்தில் மட்டும் 16 தியேட்டர்களில் காலா ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஏரியாவில் மொத்தம் சுமார் 40 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட காலா முதல் நாளே வசூலில் தடுமாறியது.

ரெகுலராகத் தியேட்டருக்கு வரக்கூடிய பார்வையாளர்களைப் போன்று பத்து மடங்கு பார்வையாளர்கள் படம் பார்க்கக்கூடிய சீட் எண்ணிக்கையுள்ள தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஆடியன்ஸ் ஒரே தியேட்டரில் குவியாமல் பிரிந்ததால் தியேட்டர்களில் ஓபனிங் இல்லை என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

முதல் வார முடிவில் சுமார் 2.5 கோடி வரை மொத்த வசூல் ஆனதாக தியேட்டர் வட்டாரத் தகவல். இரண்டாவது வாரத் தொடக்கத்தில் சிறிய ஊர்களில் காலா தூக்கப்பட்டுப் புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

கபாலி படத்தின் மூலம் கிடைத்த வருவாய் 4 கோடி. இதில் பாதியாவது காலா படத்தின் மூலம் கிடைக்குமா என்பதை உறுதிசெய்ய முடியாது என்கிறது தியேட்டர் வட்டாரம்.

சினிமா நகரமாக இருந்த சேலம் விநியோகப் பகுதியில் சினிமா ரசிகர்கள் அதிகம். காலா இங்கு கல்லா கட்டினாரா, கஷ்டத்தைக் கொடுத்தாரா?

நாளை ..

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வெள்ளி, 15 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon