மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜுன் 2018

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 20

சென்னையில் உள்ள திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிடுவது படம் தயாரிப்பதைக் காட்டிலும் சிரமமானது.

திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதற்கு முதலில் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு எந்தப் படத்தைத் திரையிடலாம் என்பதைத் தீர்மானிக்கும் கன்ஃபர்மேஷனுக்கு மாமூல் கொடுக்க வேண்டும். சென்னை நகரில் சத்யம் சினிமாஸ் தவிர அனைத்து தியேட்டர்களிலும் இது நடைமுறையில் உள்ளது. மாமூல் கொடுக்கவில்லை என்றால் படம் போடுவதில் சிரமம் ஏற்படும்.

வெளியூர்களில் புதிய படங்களுக்கு போஸ்டர்களை தியேட்டருக்கு அனுப்பிவிட்டால் அவர்களே ஒட்டி விடுவார்கள். சென்னையில் சம்பந்தபட்ட விநியோகஸ்தர் சொந்த செலவில் ஒட்ட வேண்டும். தியேட்டருக்கு முன் வைக்கப்படும் விளம்பர பேனர் விநியோகஸ்தர் செலவில் பொருத்தப்பட வேண்டும். அட்வான்ஸ், எம்.ஜி. என்ற அடிப்படையில் விநியோகஸ்தருக்கு முன்பணமாக எதுவும் கிடைக்காது. புதியவர்கள் நடித்த படமாக இருந்தால் குறைந்தபட்சம் 100 டிக்கெட்டுகள் ஒவ்வொரு காட்சிக்கும் விநியோகஸ்தர்கள் தரப்பில் வாங்க வேண்டும். இத்தனை சிரமங்களைக் கடந்துதான் சென்னை நகரில் புதிய படங்களைத் திரையிட முடியும் என்பதால் படத்தின் நகர உரிமையை வாங்குவதற்கு விநியோகஸ்தர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. பெரிய படங்களுக்கும் இதுதான் தற்போதைய நிலைமை.

சென்னை நகரத்தில் முதல் ஏழு நாட்களில் அதிகபட்சமாக வசூலானால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும். இரண்டாவது வாரத்திற்கு பின் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால் தயாரிப்பாளருக்குப் பெரிதாக லாபம் கிடைக்காது. காரணம் பெரிய படங்களுக்கு 60% வரை பங்குத் தொகை தரும் தியேட்டர் நிர்வாகங்கள் சிறிய படங்களுக்கு முதல் வாரம் 50%, இரண்டாவது வாரம் 40%, மூன்றாவது வாரம் 30% எனக் குறைவாகவே தருகின்றன. இதிலிருந்து காலா மாறுபட்டது.

காலா பட சென்னை நகர விநியோக உரிமைக்கு லைக்கா நிர்ணயித்த விலை 6 கோடி. முதல் வாரத்தில் சுமார் 10 கோடி வசூலானால் அசலைக் காப்பாற்ற முடியும். அப்புறம்தான் லாபத்தைப் பற்றி யோசிக்க முடியும்.

தியேட்டர் டிக்கெட் விற்பனை என்பதைக் கடந்து சென்னை நகரில் வேறு சில வாய்ப்புகள் உள்ளன. அதிகாலை சிறப்புக் காட்சி என அதிக விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்யலாம். குறிப்பிட்ட சில காட்சிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்க முடியும். இருப்பினும் காலா படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை

தயாரிப்பாளர் தனுஷ் மேனேஜர் சென்னை நகர விநியோக உரிமையை 6 கோடிக்கு வாங்கி, ரிலீஸ் செய்ய தியேட்டர் எடுக்கும் பொறுப்பு சத்யம் சினிமாஸிடம் வழங்கபட்டது.

சென்னை நகரத் திரையரங்குகளில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு வழங்கப்பட்டுவந்த 55% பங்குத் தொகைக்குப் பதிலாக, 70% கொடுப்பவர்களுக்குத்தான் காலா படம் என்பதில் சத்யம் சினிமாஸ் உறுதியாக இருந்தது. அதனால் உதயம் காம்ப்ளக்ஸ், கமலா திரையரங்குகள் காலா படத்தைத் திரையிட மறுத்துவிட்டன.

காலாவுக்குப் போட்டியாகப் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை. ஜுராசிக் வேர்ல்டு - 2 ஆங்கிலப் படம் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படம் ரிலீஸ் செய்யும் தியேட்டர்களில் அப்படத்திற்குக் குறைவான காட்சிகள்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சத்யம் சினிமாஸ் கடுமை காட்டியது. காலா படத்தின் மூலம் பல மரபுகளை உடைத்து எறிந்திருக்கிறது சத்யம் சினிமாஸ். இதை கண்டும் காணாமலும் இருந்தார்கள் ரஜினியும் தனுஷும்.

65%, 70% என்கிற அடிப்படையில் தியேட்டர்களில் பங்குத் தொகை கொடுக்கச் சம்மதித்த தியேட்டர்களுக்கு மட்டும் காலா திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதுவரை சென்னை நகர திரையரங்குகளில் 8.5 கோடி மொத்த வசூல் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது லாபமா, நஷ்டமா?

நாளை..

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

செவ்வாய், 19 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon