மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 20 ஜுன் 2018

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 21

ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி திரைப்படம் சென்னை நகரில் வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் மீறப்பட்டு தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமானது. அப்படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் சென்னை நகரத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருந்ததால் மரபுகளை மாற்றித் திரையரங்குகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது. அந்த நடைமுறை தொடர்ந்தது, பெரிய படங்களின் வசூலை அதிகரிக்கவும், குறைந்த நாட்களில் அதிகம் பேர் படம் பார்க்கவும் உதவிகரமாக அமைந்தது.

சிறு பட்ஜெட் படங்கள் அதே நடைமுறையைப் பின்பற்றிச் சென்னை நகரில் அதிகத் திரைகளில் படங்களைத் திரையிட்டு நஷ்டப்பட்டுவருகின்றன. அதிகமான திரைகளை நிர்வகித்துவரும் சத்யம் சினிமாஸ் காலா படத்தைப் பிற திரையரங்குகளில் வெளியிட இது வரை இல்லாத 30% .X 70% நடைமுறையை அமல்படுத்தி, விநியோகஸ்தர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க அடித்தளம் போட்டுள்ளது,

ஆனால் பிற விநியோகஸ்தர்கள் ரிலீஸ் செய்யும் படங்களுக்கு, சத்யம் சினிமாஸ் தான் அறிமுகப்படுத்திய புதிய நடைமுறையைக் கடைபிடிக்கவில்லை என்கின்ற குற்றசாட்டும் கூறப்படுகிறது.

காலா வெளியான முதல் வாரம் முழுவதும் ஏற்கனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அரசிடம் அனுமதி பெற்றதாகக் கூறப்பட்டது. அந்த அதிகபட்சக் கட்டணமே வாரத்தின் முதல் மூன்று நாட்கள் காலா படம் பார்க்க ஆடியன்ஸ் பெருவாரியாக வராமல் போகவும் காரணமாக இருந்ததைத் தியேட்டர் வட்டாரங்கள் கூறத் தயங்கவில்லை.

டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னரும் முதல் வாரம் சுமார் 8.75 கோடி வரை வசூல் ஆனதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல். மூன்றாவது வாரத்தை நாளையுடன் நிறைவு செய்ய உள்ள காலா, முதல் நாள் திரையிட்ட திரைகளில் இரண்டாவது வாரம் காட்சிகள், திரைகள் குறைக்கப்பட்டன.

சென்னை நகரில் காலா 25 நாட்களை நிறைவு செய்யும்போது சுமார் 10 கோடி வரை மொத்த வசூல் ஆகும்.

இதில் ஜிஎஸ்டி, கேளிக்கை வரி எனச் செலவுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், தயாரிப்புத் தரப்பில் சென்னை நகரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 6 கோடி அசலை எடுப்பது கடினம். அத்துமீறல், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ஆகியவற்றை அமல்படுத்தியும் 6 கோடியை அடைய முடியவில்லை.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேச விநியோகப் பகுதியில் காலா வசூல் என்ன?

நாளை..

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

புதன், 20 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon