மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜுன் 2018

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 22

காலா வெளியாகி நேற்றுடன் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 80% திரையரங்குகளில் காலா தூக்கப்பட்டு டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி, ஆந்திரா மெஸ் ஆகிய படங்கள் இன்று (ஜூன் 22) முதல் திரையிடப்படுகின்றன.

தமிழக சினிமா விநியோகத்தில் பாண்டிச்சேரி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி தென்னாற்காடு பகுதி எனக் கூறப்படுகிறது. குறைவான திரையரங்குகளைக் கொண்டுள்ள இப்பகுதியில் ஒரே நாளில் மூன்று புதிய படங்கள் வெளியானால் அனைத்து ரிலீஸ் சென்டர்களிலும் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது. பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்கள்தான் வசூல் முக்கியத்துவம் உள்ள சென்டர்கள்.

காலா படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை 12 கோடிக்குக் கேட்டு, தராததால் கேள்வி கேட்ட ரவியை சமாதானப்படுத்த அவருக்கு வட ஆற்காடு விநியோக உரிமையை லைக்கா நிறுவனம் வழங்கியது.

பாண்டிச்சேரியில் ஜிஎஸ்டி, கேளிக்கை வரி அதிகம் என்பதால் பிரதான வசூல் மையமான பாண்டிச்சேரியில் தமிழ்ப் படங்களின் வருமானம் குறைவாகவே இருக்கும். இப்பகுதியில் காலா படத்தின் வசூல் சுமார் 2 கோடிக்கும் குறைவாகவே கிடைத்துள்ளது.

காலா படத்திற்கான வசூல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி ரஜினிகாந்த் பேசிய பேச்சால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதா, இது ரஜினிகாந்த்துக்கான பின்னடைவா, தற்காலிகமானதா, நிரந்தரமானதா…

கள நிலவரம் என்ன?

நாளை..

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

வெள்ளி, 22 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon