மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 ஜுன் 2018

பலிகடா ஆக்கப்பட்டதா குமரன் தியேட்டர்?

பலிகடா ஆக்கப்பட்டதா குமரன் தியேட்டர்?

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 25

ரஜினி, விஜய், அஜீத் நடித்த படங்களின் விநியோக உரிமை வாங்கும் விநியோகஸ்தர்கள் அசல் தொகையைப் படம் திரையிடும் தியேட்டர்களில் மினிமம் கேரண்டி, ஹையர் போன்ற முறைகளில் படம் வெளியீட்டுக்கு முன் வாங்கி விடுவது வழக்கம்.

அட்வான்ஸ் அடிப்படையில் படங்களை திரையிட்டு படம் ஓடாமல் போனால் நஷ்டம் ஏற்படுவதை விநியோகஸ்தர்கள், நேரடியாக படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை.

புதிய படங்களை தயாரிப்பாளர்கள் நேரடியாக வெளியிடும் போது அந்தந்த ஏரியா விநியோகஸ்தர்கள் மூலமே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய முடியும். இதில் பல விநியோகஸ்தர்கள் சரியான கணக்குகளை தயாரிப்பாளர்களுக்குத் தருவதில்லை என்கிற குற்றசாட்டு இன்றளவும் இருந்துவருகிறது.

விநியோக முறையில் படங்களின் உரிமைகளை வாங்கும் விநியோகஸ்தர்கள் இரண்டு விதமான வசூல் கணக்குகளை கையாள்வதாகவும், அதனை நேரடியாக கேட்க முடியாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

படத் தயாரிப்புக்கும், வெளியீட்டுக்கும் பைனான்ஸ் கொடுத்தவர்களே விநியோகஸ்தர்களாக இருப்பதால் இந்த நிலை தொடர்கிறது.

திரையரங்குகளில் 30% X70% அடிப்படையில் ஒப்பந்தம் செய்துவிட்டுக் கணக்கு முடித்து அனுப்பும்போது 60% X 40% .என கணக்கு வருகிறது என்கின்றனர் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்.

சில ஊர்களில் விநியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளர்கள் இணைந்து தயாரிப்பாளருக்கு உண்மையான வசூலைக் குறைத்து காட்டி எஞ்சிய தொகையை இருவரும் பங்கு போட்டுக்கொள்வது உண்டு.

அந்த மாதிரியான புரிதல் கொண்ட தியேட்டர்தான் மேடவாக்கம் - குமரன் தியேட்டர் என்கிறது சென்னை சினிமா வட்டாரம்.

மேடவாக்கம் குமரன் தியேட்டருக்கு படங்களை கன்பார்ம் செய்வது குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உரிமையாளர் பாபு. இவர் செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்.

மேடவாக்கம் - குமரன் தியேட்டரில் காலாவெளியான முதல் நாள் ஐந்து காட்சிகள் ஓட்டப்பட்டுள்ளன. லைக்கா ஸ்குவாடு சென்றது இரண்டாம் நாள் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துச் சொன்னதால் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தது லைக்கா.

முதல் நாள் ஐந்து காட்சி ஓடியதை நான்கு காட்சிகள் மட்டுமே ஓடியதாக தியேட்டர் நிர்வாகம் கூறியதைக் குறிப்பிட்டதுடன், தொடர்ந்து காலா குமரன் தியேட்டரில் திரையிடக் கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்தது லைக்கா.

மேடவாக்கம் - குமரன் தியேட்டர் டிக்கட் விற்பனையில் தொடர்ந்து தவறான தகவலை கூறிவந்தாலும் அந்த தியேட்டர் மீது எந்த நடவடிக்கையும் தயாரிப்பாளர்களால் எடுக்க முடியவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டிய சங்க நிர்வாகி பாபு கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர் இது என்பது பிரதான காரணம்.

லைக்கா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி அபராத தொகை விதிக்க வேண்டிய தலைவர் அருள்பதி. இவர்தான் காலா படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர். குரோம்பேட்டை பாபு விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்ன அபராதம் வேண்டுமானாலும் செலுத்தத் தயாராக இருப்பதாக கூறியதால் வேறு வழியின்றி தனது சங்க கமிட்டி உறுப்பினரை காக்கவும், தியேட்டர் உரிமையாளரைப் பாதுகாக்கவும் குமரன் தியேட்டருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை செலுத்த போவது அருள்பதியா, தியேட்டர் நிர்வாகமா என்பது புரியாத புதிராக உள்ளது.

மேடவாக்கம் குமரன் தியேட்டரை தங்கள் விருப்பபடி ஆட்டுவித்து வந்த விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளின் தவறான செயல்பாடுகள் வெளி உலகத்திற்கு காலா படம் மூலம் வெளிவந்துள்ளது.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?

காலா: தமிழ் சினிமா பெற்றது, கற்றது என்ன?

செங்கல்பட்டில் நடந்த காலா பஞ்சாயத்து!

வியாழன், 28 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon