மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 ஜுன் 2018

நஷ்டத்தை உருவாக்கும் சூப்பர் ஸ்டார்கள்!

நஷ்டத்தை உருவாக்கும் சூப்பர் ஸ்டார்கள்!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 26

தமிழ் சினிமாவில் ரஜினி படத்தை திரையிட தியேட்டர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். எந்திரன் வரை இந்த விஷயத்தில் ரஜினி ஏறுமுகத்தில் இருந்து வந்தார்.

லிங்கா படத்திற்கு பின் ரஜினியின் படங்களை திரையிடுவதில் தியேட்டர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ரஜினி படங்களை திரையிட பெரும் முதலீடு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் வசூல் குறைவாகவே உள்ளது. இதனால் பண முடக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் பிரபல விநியோகஸ்தர் ஒருவர்.

குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்த ரஜினி படங்களின் வியாபாரத்தை அதிகமாக உயர்த்தி விலை வைத்தது விநியோகஸ்தர்கள் தான்.

லிங்காவும், கபாலியும் வாங்கிய விலையை அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தில் வசூல் செய்ய முடியாது என்பதை தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியும் கூட தொழில் போட்டி காரணமாக ரஜினி படங்கள் மட்டுமல்ல முன்னணி நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டப்பட்டு வருகின்றனர்.

அதன் விளைவாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுக்க வேண்டிய ‘டேம்ஸ்’ குறைக்கப்பட்டு படங்களை திரையிடுகின்றனர்.

பெரிய படங்கள் மூலம் ஏற்படும் நஷ்டத்தை பட்ஜெட் படங்களின் வருவாய் மூலமாகவே தியேட்டர்கள் ஈடுகட்ட முயற்சிக்கின்றனர்.

ஆனால் தொடர் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் சூப்பர் ஸ்டார்கள் தான் சினிமாவை வாழவைப்பதாக இன்னமும் தமிழ் சினிமா நம்பிக் கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த காலா மொத்த வசூல் என்ன? விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் தற்போதைய நிலை என்ன, திங்கள் கிழமை பகல் 1 மணிக்கு.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?

காலா: தமிழ் சினிமா பெற்றது, கற்றது என்ன?

செங்கல்பட்டில் நடந்த காலா பஞ்சாயத்து!

பலிகடா ஆக்கப்பட்டதா குமரன் தியேட்டர்?

வெள்ளி, 29 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon