மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

உங்களுக்கு எத்தனை வண்ணங்கள் தெரியும்?

உங்களுக்கு எத்தனை வண்ணங்கள் தெரியும்?

மின்னம்பலம்

தினப் பெட்டகம் – 10 (06.09.2018)

வண்ணமறியாப் பார்வைக் கோளாறு (Colour blindness) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றிய சில முக்கியமான தகவல்கள்:

1. உண்மையில் ஒரு நபர் வண்ணமறியாப் பார்வைக் கோளாறு உடையவர் என்றால், அவருக்குக் கறுப்பு, வெள்ளை, கிரே தவிர வேறு எந்த வண்ணங்களும் தெரியாது.

2. பலருக்கும் இருப்பது வண்ணமே தெரியாத பார்வைக் கோளாறு கிடையாது. குறைபாடுதான். குறிப்பிட்ட வண்ணங்கள், முக்கியமாகச் சிவப்பு, பச்சை போன்ற முதன்மை வண்ணங்கள் மட்டும் அவர்களுக்குத் தெரியாது.

3. இந்தப் பிரச்சினை பரம்பரையாக வருவது. சில வேளைகளில் ரெட்டினா அல்லது கண் பிரச்சினை காரணமாகவும் ஏற்படலாம்.

4. உலகில் வெகு சிலருக்கு unilateral dichromacy என்ற குறைபாடு இருக்கிறது. இவர்களுக்கு ஒரு கண் சாதாரணமாகவும், மறு கண்ணில் வண்ணங்கள் தெரியாமலும் இருக்கும்.

5. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம் என்றாலும், உலகளவில் ஆண்களுக்கே இந்தப் பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது.

6. பூனை, முயல் போன்ற மிருகங்களுக்கு நம் அளவுக்கு நிறங்கள் தெரிவதில்லை. பட்டாம்பூச்சி, வண்டுகள் ஆகியவற்றுக்கு நம்மை விட அதிக வண்ணங்கள் தெரியுமாம். அவற்றோடு ஒப்பிடுகையில் நாமும் வண்ணக் குருட்டுத்தன்மை உடையவர்கள்தான்!

7. ஃபேஸ்புக்கின் வண்ணம் நீலமாக இருப்பதற்கான காரணம், அதன் நிறுவனர் மார்க் சிவப்பு -பச்சை வண்ணக் குருட்டுத்தன்மை உடையவர்.

8. ரோமானியா, துருக்கி போன்ற சில நாடுகளில், இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

9. வண்ணமறியாப் பார்வைக் கோளாறு உடைய 99% பேருக்கு, சிவப்பு - பச்சை நிறம் தெரியாமலோ, குழப்பமாகவோ தெரியும்.

10. இதற்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால், குணப்படுத்த முடியாது. ஒரு வகை கண்ணாடி, லென்ஸ் அணிவதன் மூலம் வண்ணங்களைக் காணலாம். ஆனால், நிரந்தரத் தீர்வு கிடையாது.

- ஆஸிஃபா

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon