மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

வரலாற்றுச் சாதனை படைத்த பெல் நிறுவனம்!

வரலாற்றுச் சாதனை படைத்த பெல் நிறுவனம்!

அரசுக்குச் சொந்தமான பெல் நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு முதன்முறையாக ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது.

நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் கனரக மின்னணு நிறுவனம் (பெல்), ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது தரையிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்து செல்லும் ஏழு தொலைதூர ஏவுகணைகளைப் பாதுகாப்புத் துறைக்கு வழங்குவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. ரூ.9,200 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பெல் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு இயக்குநரான ஆனந்தி ராமலிங்கம் கையெழுத்திட்டுள்ளார்.

மசகான் கப்பல் நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் கட்டுதல் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் ஆகியவை உருவாக்கவுள்ள ஏழு கப்பல்களில் பொருத்துவதற்கான ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான இந்த ஒப்பந்தங்களை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆர்டரின் மதிப்பு ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த நிறுவனம் இதுவரை பெற்ற ஆர்டர்களிலேயே அதிக மதிப்பிலான ஆர்டரும் இதுதான். இந்நிறுவனம் மத்தியப் பாதுகாப்புத் துறைக்கான மின்னணு உபகரணங்களைத் தயாரித்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon