மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

விமான நிறுவனங்களுக்கு நிவாரணம்!

விமான நிறுவனங்களுக்கு நிவாரணம்!

விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதிகரித்து வரும் செலவுகளாலும், குறைவான விமானக் கட்டணங்களாலும் நடப்பு நிதியாண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் தொழிற்துறைக்கு 1.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழைமையான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை கடும் நெருக்கடியில் சிக்கி இழப்புகளைத் தவிர்க்கப் போராடி வருகின்றன. உலகின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையான இந்தியாவில் போட்டி மிகக் கடுமையாக இருப்பதோடு, விமான எரிபொருளுக்கான வரியும் உயர்வாக உள்ளது.

விமான நிறுவனங்களின் நெருக்கடியைப் போக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான சுரேஷ் பிரபு, நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு அமைச்சகங்களின் அதிகாரிகளும் இதுகுறித்து அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாட்டில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளரான ராஜிவ் நாயன் சவுபே பேசுகையில், விமானச் சேவை நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், என்னென்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறித்து அவர் விளக்கவில்லை.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon