மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

மச்சக் கன்னியாக வலம்வரும் சமந்தா

மச்சக் கன்னியாக வலம்வரும் சமந்தா

சீமராஜா படத்தில் இடம்பெற்றுள்ள மச்சக் கன்னி எனும் பாடலின் வீடியோவை யூடியூப்பில் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது ஆஸ்தான இயக்குநராக அறியப்படும் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சீமராஜா. சமந்தா, சூரி, சிம்ரன் எனப் பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டீசர், ட்ரெய்லர் போன்றவை முன்னதாக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மச்சக் கன்னி எனும் பாடலின் வீடியோ பாடல் நேற்று (செப்டம்பர் 5) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சமந்தா ஆசிரியையாகத் தோன்றும் இந்தப் பாடலில் சிவகார்த்திகேயனும் தோன்றி நடித்துள்ளார்.

டி. இமானின் வழக்கமான மெலடி பாடலாக அமைந்துள்ள இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் இந்தப் பாடலையும் டி.இமானே பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon