மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

நிதிப் பகிர்வுக்குத் தமிழகம் தகுதியானதா?

நிதிப் பகிர்வுக்குத் தமிழகம் தகுதியானதா?

தமிழகத்தின் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு அடுத்த சில நாட்களில் நிதிக் குழுவின் உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும், அதிகாரிகளையும், பொருளாதார வல்லுநர்களையும் சந்திக்கவுள்ளனர். தமிழகம் போன்றதொரு மிகச் சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட மாநிலத்துக்கு நிதிப் பகிர்வைக் குறைக்க நிதி ஆணையம் சில தவறுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

குறைந்த வருமானம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு நிதி ஆணையம் அதிக நிதிப் பகிர்வைத் தற்போது வழங்குகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள தமிழகத்துக்கும் அந்த நிதிப் பகிர்வு அதிகமாகக் கிடைக்குமா? 15ஆவது நிதிக் குழுவானது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நிதிப் பகிர்வை வழங்கவுள்ளது. இது தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்குப் பின்னடைவாகும். இம்மாநிலங்கள் 1971ஆம் ஆண்டு முதலே மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளன. குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி இருந்தால் குறைந்த நிதி மட்டுமே கிடைக்கும்.

நிதிப் பகிர்வை வழங்கும்போது, வரி வசூல், நிதி மேலாண்மை, கட்டுமானத் தேவை உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில்கொள்ள வேண்டும். இப்பிரிவுகளில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ளதால் தமிழகத்துக்கு அதிக நிதிப் பகிர்வு கிடைக்க வேண்டும். 2016-17ஆம் ஆண்டில் மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 31 சதவிகிதமாகும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதிப் பகிர்வில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.

சமீப ஆண்டுகளாகவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நியாயமான பங்குகளை மாநிலங்கள் இழந்து வருவதோடு, தமிழகம் உள்ளிட்ட சில வளர்ந்த மாநிலங்கள் மாநிலங்களுக்கிடையேயான வருவாய் பகிர்வை இழந்து வருகின்றன. தமிழகத்தின் வரிப் பங்கீட்டை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக முந்தைய நிதிக் குழு அதிகரித்தது. இருந்த போதிலும், தமிழகத்தின் வருவாய் சரிவையே சந்தித்தது. செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.5,093 கோடி இழப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி வசூல் வாயிலாகவும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அரசு தனது வருவாயைத் துறக்கும்போது, அதில் ஒரு பகுதியைப் பெற வேண்டிய மாநிலங்களும் அதை இழக்கின்றன.

வளர்ச்சி விகிதத்தில் தேசியச் சராசரியை விட அதிக வளர்ச்சியைத் தமிழகம் கொண்டுள்ளது. அதேபோல, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உள்மாநில உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் கொண்டுள்ள இரண்டாவது மிகப் பெரிய மாநிலமும் தமிழகம்தான். இதுபோன்ற வளர்ச்சிக்கு மத்திய அரசு கண்டிப்பாக ஆதரவளிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். தமிழகத்தின் உள்கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இதர தேவைகளுக்கும் போதுமான நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon