மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ம.பி. அரசு: பத்திரிகையாளர்களுக்குச் சலுகை!

ம.பி. அரசு: பத்திரிகையாளர்களுக்குச் சலுகை!

மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சமும் வாகனம், கேமரா சேதமடைந்ததால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா நேற்று (செப்டம்பர் 5) போபாலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ம.பி. அரசின் சார்பில் அவர்களது குடும்பத்துக்கு நிவாரணத்தொகை அளிக்கப்படுவதாகக் கூறினார்.

“இந்தத் தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பத்திரிகையாளர்களின் வாகனங்கள், கேமராக்கள் சேதம் அடைந்தால், தற்போது அளிக்கப்பட்டுவரும் இழப்பீட்டுத் தொகை ரூ.25,000இல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறும் பத்திரிகையாளர்களுக்கு, அவர்களது வட்டித் தொகையில் 5 சதவிகிதத்தைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். 2016ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான நிலுவைத் தொகை ஒரு தவணையாகச் செலுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 4) அன்று மாலை நடைபெற்ற ம.பி. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது