மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவசியம் என்ன?

சிறப்புக் கட்டுரை: இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவசியம் என்ன?

கர்க சாட்டர்ஜி

தமிழ்நாட்டின் நாயகனாகத் திகழ்ந்த முத்துவேல் கருணாநிதி மறைந்து சில நாட்களாகியுள்ள நிலையில், பலதரப்பட்ட எதிர்வினைகளையும், வெளிப்பாடுகளையும் நாம் பார்த்தோம். ஆங்கில ஊடகங்களில் பல்வேறு இரங்கல் செய்திகளைப் பார்த்தோம். அவை பெரும்பாலும் விக்கிப்பீடியாவில் காப்பி அடிக்கப்பட்டு சில வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டிருந்தன. இந்தி ஊடகங்களிலோ, கருணாநிதி இந்தி ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியது குறித்துக் குறிப்பிடக்கூட இல்லை. இந்தி ஊடகங்களின் மவுனத்தால் உண்மையை மறைத்துவிட முடியாது.

நான் ஒரு வங்காள பிராமணர். பள்ளியில் எனது முதல் மொழி வங்காளமாகவும், கல்வி மொழி ஆங்கிலமாகவும் இருந்தது. என்னுடைய பணிக்கும், உலகப் பார்வைக்கும் அண்ணாதுரை மற்றும் அவரது தளபதி கருணாநிதியின் மரபே காரணமாகும். அவர்களின் மரபு தொடங்கியதோ 1965ஆம் ஆண்டு முதல்.

இந்தி மொழி சாரா மக்கள் மீது இந்தியைத் திணிப்பதை அவர்கள் எதிர்த்தார்கள். இந்தி சாரா மக்கள் அனைவரையும் அவர்கள் காப்பாற்றினார்கள். இந்திய ஒன்றியத்தின் சேவைத் துறைப் பொருளாதாரம் தற்போது ஆங்கில அறிவின் அடிப்படையிலேயே இயங்கிவருகிறது. அதன் ரத்த நாளங்களில் படித்த ஐடி இளைஞர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ் தலைவர்களின் போராட்டத்தின் விளைவாக உருவானவர்கள். இதில் முக்கியப் பங்காற்றியவர் முத்துவேல் கருணாநிதி.

எப்படி, என்று விளக்குகிறேன்.

எந்தவொரு தனிப்பட்ட மொழியின் அடிப்படையிலும் இந்திய ஒன்றியம் உருவாக்கப்படவில்லை. எனினும், ஆரம்பம் முதலாகவே, இந்தி ஏகாதிபத்திய மற்றும் பேரினவாதக் கொள்கைகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியை அனைவருக்குமான மொழியாக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அரசியல் சாசனக் குழுவே இதுகுறித்து ஆலோசித்தது. இந்தி தெரியாதவர்கள் அரசியல் சாசனக் குழுவில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்று ஒன்றிய மாகாணங்களின் பேரவை உறுப்பினரான ஆர்.வி.துலேகர் வெளிப்படையாகவே கூறினார்.

இதே உணர்ச்சியை அரசியல் சாசனக் குழுவின் பல்வேறு உறுப்பினர்களும் (இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) எதிரொலிக்கத் தொடங்கினர். முற்போக்குவாதிகள், மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகள், இந்து மதவாதிகள் என அனைத்துவிதமான கொள்கைகளை உடையவர்களும் அதிலிருந்தனர். இக்கருத்தியல்களைக் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தனர். எனினும், மாறுபட்ட கொள்கை கொண்டிருந்தாலும், இந்தி மேலாதிக்கம் என்று வரும்போது ஒருமித்த குரலையே எழுப்பினர். இதன் விளைவாக இந்தியை எதிர்க்கும் இந்தி சாரா மக்களுக்கும், இந்தியை மற்றவர்கள் மீது திணிக்க விரும்பிய இந்தி மொழியாளர்களுக்கும் இடையே விவாதம் எழுந்தது.

இறுதியாக ஒரு சமரச முடிவுக்கு வந்தனர். தற்காலிகமாக இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து வைத்திருக்கப்பட்டது. அதோடு இந்தியும் மற்றொரு அலுவலக மொழியாக இருக்கும்படி முடிவு செய்யப்பட்டது.

இந்திய ஒன்றியத்தின் தனி அலுவலக மொழியாக இந்தி நியமிக்கப்பட்ட பிறகு ஆங்கிலம் நீக்கப்படுவதாக இருந்தது. இந்த ஏற்பாடு இந்தி சாரா உயரடுக்கு மக்களுக்கும் (ஆங்கிலம் மட்டும் கற்று அதன் வாயிலாக வேலைவாய்ப்புகள் மற்றும் அதிகாரம் பெறும் வாய்ப்பு பெற்றவர்கள்) ஒட்டுமொத்த இந்தி பேசும் மக்களுக்கும் (அனைவருமே அதிகாரத்தைப் பெறும் வாய்ப்பு பெற்றவர்கள்) இடையே போடப்பட்ட ஓர் ஒப்பந்தம் போன்றதாகும். இதன் விளைவாக பெரும் இழப்பைச் சந்திக்கக்கூடியவர்கள் இந்திய ஒன்றியத்தின் இந்தி சாரா மக்களே ஆவர். இந்தி சாராத மக்களே அன்றும், இன்றும் இந்திய ஒன்றியத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர்.

அரசியல் சாசனக் குழுவே உலகளாவிய வயதுவந்தோர் உரிமைகளின் அடிப்படையில் (கல்வி, வரி செலுத்துதல், சொத்து நிலை, வாக்குரிமை ஆகியவற்றின் அடிப்படையில் 12 விழுக்காட்டினர்) அமைக்கப்படவில்லை. இதன் விளைவாக 1946ஆம் ஆண்டில் சோ ராமசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கு இணையானவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளானார்கள். ஆனால், அவர்களும்கூட இந்தி பேரினவாத மனப்பான்மையால் எரிச்சலடைந்தனர்.

அண்ணாவின் தலைமையில், கருணாநிதி தளபதியாக திமுக வளர்ச்சியடைந்து வந்தது. திமுகவின் வளர்ச்சியால் தமிழர்களின் நிலத்தில் இந்தித் திணிப்பு தடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. ஆங்கிலம் நீக்கப்பட்டு, டெல்லியின் ஏகாதிபத்திய மனப்பான்மையால் இந்தியாவின் தனி அலுவலக மொழியாக இந்தி உருவெடுக்கவிருந்த காலத்தில், தமிழர்கள் எதிர்த்தனர்.

கன்னடர்கள், தெலுங்கர்கள், வங்காளிகளும் கூட இந்தியை எதிர்த்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அது ஒரு மிகப்பெரும் கலாச்சார எதிர்ப்பாக உருமாறியது. தமிழர்கள் தங்களது இளைஞர்களுக்கான வாய்ப்புகள் எப்படித் தடுக்கப்படும் என்பது குறித்து அறிந்திருந்தனர். அனைத்து இந்தி சாரா இளைஞர்களுக்குமே இது பொருந்தும் என்றாலும், வரலாறு, அரசியல் பாரம்பரியம், பன்னாட்டு, பன்மொழி சார்ந்த ஆட்சி முறை குறித்த புரிதல் கொண்ட தமிழர்களோ காரணத்துடனும், பேரார்வத்துடனும் எதிர்வினை ஆற்றினார்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தீவிரம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், இந்தியைத் தனி அலுவலக மொழியாக்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்தி சாராத மக்கள் இந்தியை அலுவலக மொழியாக்கும்படி ஒப்புக்கொள்ளும் வரை இத்திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தி எப்போதுமே தனி அலுவலக மொழியாகப் போவதில்லை என்ற நிலை உருவானது.

அலுவலக மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து வைக்கப்பட்டதால், இந்திய ஒன்றியத்தின் இந்தி சாராத உயரடுக்கு மக்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடிந்தது. அந்த வாய்ப்பைப் பெற்றவர்களில் நானும் ஒருவன். மு.கருணாநிதி போன்ற தமிழ்த் தலைவர்களின் முயற்சியினால்தான் என்னால் இன்று கட்டுரையை எழுத முடிகிறது; ஆங்கிலத்தில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட முடிகிறது; ஆங்கிலச் செய்தித் தளத்தில் ஆசிரியராகவும் பணிபுரிய முடிகிறது.

கருணாநிதியின் அரசியலின் விளைவினால்தான் இன்று ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள், ஆங்கில மொழிப் புத்தகங்கள், ஆங்கிலத்தை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்புச் சூழல்கள் இந்திய ஒன்றியத்தில் உருவாகியுள்ளன. கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் தலைமையில், தமிழ்நாட்டில் பெருமளவிலான பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு, தொழில்நுட்ப அறிவு கொண்ட தொழிலாளர் படை உருவாகி தமிழகத்தின் நிலைமையே மாறியது. மொழி அடையாள அரசியலின் வெற்றிக்கான சோதனையாகவே இதை நாம் பார்க்க வேண்டும்.

மற்ற திராவிட மாநிலங்களும் இதைப் பின்பற்றின. இந்தி பேசும் மாநிலங்களிலும் கூட ஆங்கிலத்துக்கான தேடலே அதிகமாக உள்ளது. இந்தி சாரா மக்களைக் காட்டிலும், இந்தி பேசும் மக்களுக்கு ஒன்றிய அரசு வேலைகள், டெண்டர்கள், தகவல் மற்றும் சேவைக்கான வாய்ப்புகள் அனைத்தும் மிகுதியாக இருந்தபோதிலும், இந்தி மாநிலங்களில் ஆங்கிலத்துக்கான தேவை மிகுதியாகவே இருந்துள்ளது. இந்தி மக்கள் மற்றும் ஆங்கிலம் கற்ற இந்தி மக்கள் போட்டியிடும் இடங்களிலிருந்து பெரும்பாலான இந்தி சாரா மக்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மொழியியல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2001 வழங்கும் தகவல்களின்படி, வங்காளிகளில் 83 விழுக்காட்டினருக்கு வங்க மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இந்த உண்மை நிலவரம் குறித்து கருணாநிதி நன்கு அறிந்திருந்தார்.

மொழிசார்ந்த மாற்ற முடியாத உரிமைகளுக்காகப் போராடியவர்தான் முத்துவேல் கருணாநிதி. அதிகாரத்தை அபகரிக்கத் துடிக்கும் டெல்லிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவராகத்தான் அவர் திகழ்ந்தார். தமிழகம் போன்ற பொருளாதார பலம் படைத்த ஒரு மாநிலம் எதிர்த்து நின்றால், டெல்லி ஏகாதிபத்தியம் பேச்சுவார்த்தைக்காக இறங்கித்தான் ஆக வேண்டும் என்பதைக் கருணாநிதியும், அவரது தலைமுறை போராளிகளும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

சமத்துவத்தின் அடிப்படையிலான இந்திய ஒன்றியமே கருணாநிதியின் கனவாக இருந்தது. ஆகையால்தான், அனைத்து 8ஆவது அட்டவணை மொழிகளுக்கும் சமமான அரசியல் சாசன உரிமைகளையும், தகுதியையும் வழங்குமாறு அவர் குரல் கொடுத்தார். சமத்துவத்துக்காக அவர் குரல் எழுப்பினார்.

வங்காளிகள் மீது பாகிஸ்தான் உருது மொழியைத் திணிக்க முயன்றபோது, அதற்குத் தக்க பதிலடியைப் பெற்றது. உலகம் முழுவதிலும், ஒருவர் தனது மொழியை மற்றவர் மீது திணிக்க முயல்வது, பல வகை குடிமக்களை உருவாக்குவதற்கே ஆகும். முதல் குடிமக்கள், இரண்டாம் குடிமக்கள், மூன்றாம் குடிமக்கள் என்று உருவாகும்போது, அது ஓர் உடைப்புக்கான வழியை வகுக்கிறது. பல மொழிகளை உள்ளடக்கிய ஓர் ஆட்சி அமைப்பில், ஒன்று ஒற்றுமை இருக்க முடியும், அல்லது சீர்நிலை இருக்க முடியும். இரண்டையும் ஒருசேரப் பெற முடியாது.

நன்றி: டெய்லியோ

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: ரஃபேல் விவகாரம் - யார் சொல்வது உண்மை?

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon