மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி!

உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி!

கேரள கடல் பகுதியில் கப்பல் மோதி உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் இணயம், புத்தந்துறை, தேங்காபட்டணம், அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று கேரள மாநிலம் முனம்பம் என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கப்பல் ஒன்று மோதி படகு கவிழ்ந்தது. இதில், நான்கு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், காணாமல் போன மீனவர்கள் இறந்தவர்களாகக் கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon