மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

எந்தப் பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்.எல்.ஏ.

எந்தப் பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்.எல்.ஏ.

ஒரு பையன் விரும்பினால் எந்தப் பெண்ணையும் கடத்துவதாக மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராம் கடம் என்ற பாஜக எம்.எல்.ஏ. அவருடைய தொகுதியான மும்பையின் புறநகரிலுள்ள காட்கோபூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். எந்த வேலைக்கும் அழைக்கலாம். சில இளைஞர்கள் விரும்பிய பெண்கள் அவர்களை நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன்.

அந்த விஷயத்தில் நான் உங்களுக்கு 100 விழுக்காடு எந்த உதவியும் செய்ய தயார். அந்தப் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கடத்திவந்து யார் காதலிக்கிறாரோ அவரிடம் தருகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவருடைய மொபைல் எண்ணையும் கூட்டத்திலுள்ள அனைவருக்கும் தந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிவசேனா கட்சி, பாஜக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்குக் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ. பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அந்த எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டதற்கு, தன்னுடைய கருத்துகள் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon