மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

மருது சகோதரர்களுக்குச் சிலை: அரசு உத்தரவு!

மருது சகோதரர்களுக்குச் சிலை: அரசு உத்தரவு!

காளையர்கோவிலில் பெரிய மற்றும் சின்ன மருது சிலைகள் வைக்க அனுமதி கோரித் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை நேற்று (செப்டம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், காளையர்கோவிலில் உள்ள பெரிய மற்றும் சின்ன மருது பாண்டியர்களின் கல் சிலைகள் பழுதடைந்துள்ளதால், அதைப் புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள் துறைச் செயலாளர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon