மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

சிறப்புப் பார்வை: நல்ல ஆசிரியர்கள் குறைந்துவிடவில்லை

சிறப்புப் பார்வை: நல்ல ஆசிரியர்கள் குறைந்துவிடவில்லை

நரேஷ்

ஆசிரியர் தினத்துக்கென்று ஒரு சிறப்புண்டு. 1882ஆம் ஆண்டு பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் சரியாக 80 வருடங்கள் கழித்து 1962ஆம் ஆண்டு ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டது. தான் ஜனாதிபதியாக இருந்தபோது, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதை அவரே அரசாங்க அதிகாரியாக இருந்து தலைமையேற்றார். இதுபோன்ற பெருமையை வரலாறு மிகச் சிலருக்கே பரிசளித்திருக்கிறது. அன்றிலிருந்து நல்லாசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக வருடந்தோறும் 25 பேர் தமிழகத்திலிருந்து நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஒரே ஒருவர்தான் நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்குக் காரணம் தமிழகத்தின் நல்லாசிரியர்களுக்கான பற்றாக்குறை அல்ல. ஒட்டுமொத்த தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மிக அதிகமான அளவில் குறைத்துள்ளது. 345 எனும் எண்ணிக்கையிலிருந்த மொத்த தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை 45 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் தகுதியானது என்பதற்கு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பகவான் போன்ற ஆசிரியர்களே சான்று. அவர்கள் மீது மாணவர்கள் பொழியும் அன்பே அவர்களுக்கான வாழ்நாள் விருது.

இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் ஆசிரியர் பிரதிநிதியாக நல்லாசிரியர் விருது வாங்கப்போகும் ஆசிரியை இரா.சதி, மிகவும் சுவாரஸ்யமானவர். அவரின் செயல்கள் மிகவும் வித்தியாசமானவை.

திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக தேசிய அளவில் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து பேனர்கள் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டுவரும் மத்திய அரசை விடவும், மிக எளிமையான முற்றிலும் செயல்படக்கூடிய தீர்வை இவர் செய்துகாட்டியிருக்கிறார்.

குட்டி கமாண்டோக்கள்

தனது பள்ளியில் பயிலும் மாணவர்களைத் திரட்டி ‘குட்டி கமாண்டோஸ்’ என்ற பெயரில் ஒரு படையே உருவாக்கினார். இப்படை அனுதினமும் காலையும் மாலையும் விசிலடித்தப்படி ஊருக்குள் வலம் வரும். இந்நடவடிக்கை காலப்போக்கில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது. இப்படையையும் மீறிப் பொதுவெளியில் மலம் கழிப்போருக்கு தண்டனையும் உண்டு. திறந்தவெளியில் மலம் கழிப்பதானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்குப் புரியும்வரை விளக்குவார்கள்.

2012ஆம் ஆண்டு 146 என்னும் எண்ணிக்கையில் இருந்த பள்ளியில், ஆசிரியர் சதியின் வருகைக்குப் பிறகு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. இன்று 270க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அரசுப் பள்ளியில் பயில்கின்றனர். காரணம், இது அரசுப் பள்ளி எனும் எந்த முத்திரைக்குள்ளும் அடங்காததுதான்.

ஆச்சரியமூட்டும் அரசுப் பள்ளி

கோவையில் இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குள் நுழையும்போது, அது அரசுப் பள்ளிக்கான நம் முன்முடிவுகளை முற்றிலும் தகர்த்துவிடுகிறது. டை, பெல்ட், ஷூ சகிதம் வலம்வரும் ‘டிப்-டாப்’ மாணவர்கள், மாணவர்களே விவசாயம் செய்து விளைவித்த காய்கறிகள், கீரைகள், பூச்செடிகள் என்று புத்துணர்வுடன் காட்சியளிக்கும் பள்ளி வளாகம் என்று சூழலையும் சேர்த்து சிறப்பாகப் பேணிக் காத்துவருகிறார்கள்.

இவரின் ஆகச் சிறந்த சாதனை என்னவென்றால், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அங்கிருந்து அரசுப் பள்ளி நோக்கி வரவைத்ததுதான். அரசுப் பள்ளியிலிருந்து மாறுதலாகி தனியார் பள்ளிக்குச் செல்லும் நிலைமையை மாற்றும் முதல் முயற்சியைச் செயல்படுத்தி காட்டியதே அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதுதான்!

நேற்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தை ஒட்டி நாம் நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்லியிருப்போம். வாழ்த்துகளைச் சொல்வதோடு நில்லாமல், சதிபோன்ற ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாமே!

கட்டுரையாளர்: பா.நரேஷ்

சிறந்த பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், ரேஷன் கடைகளின் அழிவு பற்றிய இவரது காணொளி அதிகமாகப் பகிரப்பட்டது. மாற்றுக்கல்வி, இயற்கை சார்ந்த மரபு வாழ்வியல், விளையாட்டு மற்றும் மருத்துவச் செயல்பாட்டாளர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பற்றிய இவரின் ஆவணம் மாறுபட்டக் கோணத்தை கொடுத்துப் பாராட்டை பெற்றது.

தொடர்புக்கு: [email protected]

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon