மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

ஏழு கல்லும் ஐந்து புலன்களும்...

சிறுமிகளுக்குன்னே சில சிறப்பான விளையாட்டுகள் இருக்கு. பருத்தி வீரன், மைனா, பூவரசன் பீப்பி எனக் கிராமங்கள் பத்தி எந்தப் படம் வந்தாலும் அதுல சிறுமிகள் இந்த விளையாட்டைத்தான் விளையாடிட்டிருப்பாங்க.

ஏழாங்காய்

விளையாட்டு: ரெண்டு பேர் விளையாடுற விளையாட்டு. ஜல்லிக்கல், கூழாங்கல்னு சின்னதா ஏதாவது ஏழு கற்களை எடுத்துக்கணும். அந்த கற்களோட பெயர் - காய்.

ஒரு காயைக் கையில வெச்சுக்கிட்டு, தரையில போட்டுடணும். இப்போ கையில இருக்கும் காயை மேலே தூக்கிப் போடணும். அந்தக் காய் கீழே வரதுக்குள்ள, கீழிருக்கும் காயை எடுத்துடணும். மேலே போட்ட காய் கீழே விழாமல் அதையும் பிடிக்கணும்.

இதைவிடப் பெரிய சவால், இவற்றைச் செய்யும்போது இவற்றுக்கான பாடலையும் பாடணும்.

பாடல்:

ஆல இலை பொறுக்கி

அரச இலை பொறுக்கி

கிண்ணம் பொறுக்கி

கீரிப்புள்ள தாச்சி

தாச்சின்னா தாச்சி

மதுர மீனாட்சி

இந்த ஆறு வரிப் பாடலைப் பாடி முடிக்கும்போது, கீழிருக்கும் ஆறு கற்களையும் சிந்தாம சிதறாம எடுத்திடணும். வரிக்கு ஒரு கல்லுன்னு எடுத்து இந்த விளையாட்டை விளையாடும்போது, கண்ணு, கை, காது, வாய்னு அத்தனை புலன்களும் அலெர்டா இருந்தாதான் ஜெயிக்க முடியும்.

புலன்களைக் கட்டுப்படுத்துற வித்தை மட்டும் வசமாயிட்டா, இந்த விளையாட்டுல மட்டுமில்லை நண்பர்களே… படிப்பு, வாழ்க்கைன்னு எல்லாத்துலேயும் வின்னர்தான்!

வேற எதுக்கு வெயிட்டிங்..!?

- நரேஷ்

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon