மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ஜிஎஸ்டி: ஆன்மிகத்துக்கும் வரி!

ஜிஎஸ்டி: ஆன்மிகத்துக்கும் வரி!

ஆன்மிகப் புத்தகங்கள், சிடிக்களின் விற்பனைக்கும் ஜிஎஸ்டி பொருந்தும் என்று உயர்நிலைத் தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த புத்தகங்கள், பத்திரிகைகள், டிவிடிக்கள், தங்குமிடம், உணவு மற்றும் இதர பொருட்களின் விற்பனை வாயிலாகக் கிடைக்கக்கூடிய வருவாய்க்கு வரி வசூல் பொருந்தும் என்று உயர்நிலைத் தீர்ப்பாணையம் (Authority for Advance Rulings) தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர உயர்நிலைத் தீர்ப்பாணையத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், இதுபோன்ற வருவாயைத் தொண்டு நிதியாகக் கருத முடியாது எனவும், அவை தொழிலாகவே கருதப்படும் எனவும், அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட வேண்டும் எனவும் உயர்நிலைத் தீர்ப்பாணையத்தின் மகாராஷ்டிர அமர்வு தெரிவித்துள்ளது.

ஸ்ரீமத் ராஜ்சந்திர அத்யத்மிக் சத்சங் சாதனா கேந்திராவால் தொடுக்கப்பட்ட மனுவுக்கு உயர்நிலைத் தீர்ப்பாணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் மதம் சார்ந்த மற்றும் ஆன்மிகப் போதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதால், அச்செயல்பாடுகளைத் தொழிலாகக் கருத முடியாது என்று ஸ்ரீமத் ராஜ்சந்திர அத்யத்மிக் சத்சங் சாதனா கேந்திரா முறையிட்டது. இதன்படி, புத்தகம், சிடி, தங்குமிடம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்றும் இந்த அமைப்பு வாதிட்டது. எனினும், ஆன்மிகப் புத்தகங்கள், டிவிடி, தங்குமிடம் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி பொருந்தும் என்று உயர்நிலைத் தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon